இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளதுடன் இந்திய மீனவர்களின் 3 மீன் பிடி இழுவைப்படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட 3 மீன் பிடி இழுவைப்படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் உதவிக் கடற்றொழில் பணிப்பாளரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.