(எம்.நியூட்டன்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இரண்டாவது பன்னாட்டு ஆய்வு மாநாடு இம்மாதம் 14ஆம் 15 ஆம் திகதிகளில் யாழ்.திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது என பீடாதிபதி த.றொபேட் அருட்சேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில, இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய தூணைத் துதுவர் ஸ்ரீ சாய் முரளி கலந்து கொள்வதுடன் இம்மாநாடு பொதுத்தலைவர் துணைவேந்தர் பேராசிரியர் சிறி.சற்குணராஜா, தலைவர் பீடாதிபதி திரு.த.றொபேட் அருட்சேகரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி சீதாலட்சுமி பிரபாகரன், செயலாளர் முனைவர் திருமதி கிருபாசக்தி கருணா, பதிப்பாசிரியர் முனைவர் திருமதி அருட்செல்வி கிருபைராஜா ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவால் முன்னெடுக்கப்படள்ளது.
தமிழர் கலைகள் - மரபும் மாற்றமும் எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள் உரையை தமிழ்நாட்டில் இருந்து வருகை தரும் பேராசிரியர் செ.இரகுராமன் வழங்க உள்ளார்.
விரலிசை அமுதம், தமிழிசை அரங்கு, கொஞ்சும் சதங்கை, மணிமேகலை எனும் தலைப்புக்களில் அமைந்த ஆற்றுகை நிகழ்வுகள் இப்பீடத்தின் இசை, வாத்திய இசை, நடன, நாடகத் துறையினரால் அளிக்கை செய்யப்பட உள்ளன. இந்நிகழ்வுகள் அனைத்தும் யாழ்.திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் 15.11.2025 அன்று நான்கு மணியில் இருந்து நடைபெற ஏற்பாகியுள்ளது என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM