கந்தானை பகுதியில் வசிக்கும் பிரபல பாடகியின் பின் தொடர்ந்து தொல்லை செய்த நபர் என்று கருதப்படும் நபரொருவர் கந்தானை பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நபர் திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார்.

கந்தானை பழைய டி.ஆர்.ஓ வீதியில் பாழடைந்த வீட்டில் வசித்தும் வரும் குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னா் பாடகியின் வீட்டிற்கு சென்றவேளையில் அங்கிருந்த நபரொருவர் அவரை தாக்கி முழங்காலிடவைத்து அவரின் மீது பெற்றோல் ஊற்றி வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை மீட்ட பொலிஸார் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் கந்தானை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த பாடகி தன்னுடைய மனைவி என்றும் அவர் பத்திரிகைகளுக்கு வழங்கிய செய்திகளில் தம்மை பற்றி தெரிவித்துள்ளதாகவும் மற்றும் அப்பத்திரிகை பிரதிகள் தன்வசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.