நடிப்பில் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்தி பான் இந்திய அளவில் ரசிகர்களை சம்பாதித்திருக்கும் தென்னிந்திய நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மே' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அவளிடம் சொல்' எனும் புதிய பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேரே இஷ்க் மே' எனும் திரைப்படத்தில் தனுஷ், பொலிவுட் நடிகை கீர்த்தி சனோன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'அவளிடம் சொல்..' எனத் தொடங்கும் புதிய பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மசூக் ரஹ்மான் எழுத ,பின்னணி பாடகர் ஏ ஆர் அமீன் மற்றும் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இசைப்புயலின் மயக்கும் மெட்டுகளில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் ... காதலர்களின் விருப்பத்திற்குரிய இசை பட்டியலில் இணைந்து இருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM