சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா ' திரைப்படத்தின் முன்னோட்டம்

07 Nov, 2025 | 03:31 PM
image

மலையாள நடிகரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான துல்கர் சல்மான் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'காந்தா' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காந்தா' எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்ய ஸ்ரீ போர்சே, ராணா ரகுபதி உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

டானி சாஞ்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்திருக்கிறார். ஒரு திரை நட்சத்திரத்தின் வாழ்வியலை பேசும் இந்த திரைப்படத்தை ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எந்த தனி மனிதனும்,  ஒரு புத்தகமும் சொல்லித் தராத பல விடயங்களை சினிமா எமக்கு சொல்லிக் கொடுத்தது. நேற்றைய விட இன்று இன்னும் நல்லவனாக இருக்க வேண்டும் என்றும் சினிமா தான் சொல்லிக் கொடுத்தது. இதனால் நான் சினிமாவை இறுக பற்றி கொண்டேன்.‌

1950களில் தமிழ் திரையுலகில் ஆளுமைகளாக உச்சத்தில் இருந்த நட்சத்திரங்களின் வாழ்வியலும் , அவர்கள் எதிர் கொண்ட மனப் போராட்டத்தையும் மையப்படுத்தி தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன் '' என்றார்.

முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் - காலகட்டத்தை நேர்த்தியாக பிரதிபலிப்பதாலும் , அக்காலகட்ட சினிமாவை நுட்பமாக விவரித்து இருப்பதாலும்,  வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20