'நடனப் புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' வுல்ஃப்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'சாசா சாசா 'எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இந்தப் பாடலில் மூன்று தேவதைகள் கவர்ச்சியாகத் தோன்றுவதால் இணையத்தில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தும் வருகிறது.
இயக்குநர் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'வுல்ஃப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, ராய் லட்சுமி, வசிஷ்டா என். சிம்ஹா, அனுசுயா பரத்வாஜ் ,அஞ்சு குரியன், ரமேஷ் திலக், 'லொள்ளு சபா' சுவாமிநாதன், தீபா, ஸ்ரீ கோபிகா, அவினாஷ், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சன்தேஷ் நாகராஜ் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'சாசா ..'என தொடங்கும் புதிய பாடலும் பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் அம்ரீஷ் எழுத , பின்னாடி பாடகர் ஹரி சரண் பாடியிருக்கிறார். இப்பாடலுக்கான காணொளியில் தனி அறை ஒன்றில் பிரபுதேவா - லட்சுமி ராய் -அனுசுயா பரத்வாஜ் - வசிஷ்டா ஆகிய மூன்று நடிகைகளும் கவர்ச்சியான தோற்றத்தில் தோன்றுவதால் டிஜிட்டல் தள ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM