டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் - விஷ்ணு விஷால் நம்பிக்கை

07 Nov, 2025 | 03:09 PM
image

எங்களின் ஐந்தாண்டு கால உழைப்பில் வெளியான 'ஆரியன்' திரைப்படத்திற்கு பட மாளிகையில் ரசிகர்களும், ஊடகத்தினரும் அளித்த வரவேற்பை போல்.. இந்த படம் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெறும்'' என ஆரியன் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் பிரவீண். கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் -செல்வ ராகவன்- ஷ்ரத்தா ஸ்ரீநாத் - மானசா சவுத்ரி - உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ஆரியன்' எனும் திரைப்படம் படமாளிகையில் வெளியாகி ரசிகர்களிடம் பாரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து படத்தினை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வினை படக்குழுவினர் ஒருங்கிணைத்தனர் . சென்னையில் பிரத்யேகமாக நடைபெற்ற இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்குபற்றினர்.

இதில் படத்தின் நாயகனும் , தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் பேசுகையில், '' ஆரியன் எமக்கு மிகவும் ஸ்பெஷலான படம். எனது நிறுவனத்தில் இருந்து தயாரித்து வெளியான மூன்றாவது வெற்றி படம். சில காரணங்களால் இப்படம் திட்டமிட்ட திகதியில் வெளியிடாமல் தள்ளிப் போனது. ஆனால் இந்த இடைவெளியில் இயக்குநர் பிரவீண் நன்றாக உழைத்து புதிய கோணத்தில் இந்த படைப்பை வழங்கியுள்ளார்.

படம் வெளியான பிறகு உச்சகட்ட காட்சியின் நீளம் குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்கு மதிப்பளித்து படத்தின் நீளத்தை குறைத்தோம். தற்போது படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  படமாளிகையில் இப்படத்திற்கு கிடைத்து வரும் ஆதரவை விட டிஜிட்டல் தளங்களில் இப்படம் வெளியாகும் போது சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

இதனிடையே 'ராட்சசன்' படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் காவல்துறை உயர் அதிகாரியாக தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது என்பதும் அதற்கு மேல் படம் இன்வெஸ்டிகேட் கிரைம் திரில்லர் ஜேனரில் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்கள் இருந்ததால்.. ரசிகர்களிடம் தொடர்ந்து இப்படத்திற்கு ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45
news-image

திரு வீர்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து...

2026-07-13 16:33:09
news-image

இசை குயில் 'எஸ். ஜானகிக்கு இந்தியத்...

2026-07-12 14:14:16
news-image

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...

2026-07-11 21:42:07