2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம் !

Published By: Priyatharshan

07 Nov, 2025 | 05:57 PM
image

வரவு - செலவுத் திட்டம் - 2026 - நேரலை பகுதி - I  - https://www.virakesari.lk/article/229638

  • புதிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு இலகு வட்டி அடிப்படையில் கடன் வழங்க 25 மில்லின் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • விவசாயிகளுக்கு கடன் வழங்க 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • சகல  தொழிற்றுறைகளிலும் கடன் பெற்றுக் கொள்ள 80 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • சுற்றுலாத்துறையை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட சுற்றுலாத்துறை தலங்களை அபிவிருத்தி செய்ய 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • அப்புத்தளை பிரதேசத்தை பிரதான சுற்றுலாத்துறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி

  • சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • கொழும்பு பேர வாவியை தூய்மைப்படுத்தி  சுற்றுலாத்துறையை மேம்படுத்த 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • 2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் ஆள் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் - ஜனாதிபதி

  • அடுத்த ஆண்டு முதல் அரச நிறுவனங்களில் நிகழ்நிலை முறைமை ஊடாக கொடுக்கல் வாங்கலின் போது சேவைக் கட்டணம் அறவிடப்படாது. நிகழ்நிலை முறைமை கொடுக்கல் ,வாங்கல் கருத்திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் AI திட்ட பயிற்சிக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ப்ரோவ்ட் பேன்ட் பற்றுறுதிச்சீட்டு ( வவுச்சர் ) நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் - ஜனாதிபதி

  • டிஜிட்டல் துறை ஆராய்ச்சியாளர்களுக்காக "அக்னி நிதியம் " உருவாக்கப்படும். இதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • சிறைச்சாலைகளை மறுசீரமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • விசேட தேவையுடையவர்களின் நலன்களுக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • அரச சேவையின் ஆட்சேர்ப்பின் போது விசேட தேவையுடையோர் 3 சதவீதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் - ஜனாதிபதி

  • ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன் கருதி 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டும் 6000 ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி

  • விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி, சிற்றுச்சாண்டிச்சாலை மற்றும் வளாக பொது சேவை அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • அரச பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்கு 11 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபொல கொடுப்பனவு 5000 ரூபா, இதர கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி

  • ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிப்பு - ஜனாதிபதி

  • தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ அறிக்கையின் பிரகாரம் மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி

  • பிரஜா சக்தித் திட்டம் ஊடாக சகல மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட மக்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்க வேண்டும் என்பது எமது கொள்கை - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது வழங்கப்படும் 1350 ரூபா ,2026 ஜனவரி மாதம் முதல் 1550 ரூபா வரை அதிகரிக்க பரிந்துரை - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1550 மேலதிகமாக, அரசால் வருகை ஊக்குவிப்பு தொகையாக 200 ரூபா வழங்க பரிந்துரை - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு  1750 ரூபா சம்பளம் கிடைக்கப்பெறும்  - ஜனாதிபதி

  • பெருந்தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2041 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது - ஜனாதிபதி

  • கிராமிய வீதி அபிருத்திக்கு 24 ஆயிரம் மில்லியன் ரூபா, கிராமிய பாலம் அபிவிருத்திக்கு 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • மகளிர் வலுவூட்டலுக்கு 240 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -  ஜனாதிபதி

  • யானை - மனித மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு வனவள திணைக்களத்துக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யவும்,மின்வேலி அமைக்கவும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • வனவளத்துறை திணைக்களத்துக்கு நிரந்தர நியமனத்துக்கு அமைய 5000 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம் - ஜனாதிபதி

  • யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வு காண 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • ஊடகவியலாளர்கள் உயர்கல்வி ,மற்றும் ஊடக தொழிற்றுறைக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய கடன் வழங்கலுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • சீன திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புக்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் - ஜனாதிபதி

  • நெல்,வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உட்பட அத்தியாவசிய பொருட்களை சதொச நிறுவனம் கொள்வனவு செய்து களஞ்சியம் செய்யும் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • தேசிய பாற்பண்ணை தொழிற்றுறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு  600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

 

  • மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு  உபகரணங்கள் வழங்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • மீன்பிடி தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்க 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி  திட்டங்களை செயற்படுத்த 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • கிரான் பாலம், பொன்டுகால் பாலம் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • தூய்மையான குடி நீர்த் திட்டத்துக்கு 85,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • நீண்ட தூர பேருந்து சேவைக்கு புதிதாக 600 பேருந்துகளை சேவையில் இணைத்துக்கொள்ள 3,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • புகையிரத சேவைக்கு  நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • வலுச்சக்தி துறையை வினைத்திறனாக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -  ஜனாதிபதி

  • வலுச்சக்தி்த் துறையை  வினைத்திறனாக்கும் வகையில் "வலுச்சக்தி பரிவர்தனை" சட்டமூலம் அடுத்தாண்டு  கொண்டு வரப்படும் - ஜனாதிபதி

  • கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் 2026 முதல் காலாண்டில் செயற்படுத்தப்படும் - ஜனாதிபதி

  • திண்மக் கழிவகற்றலுக்கு  900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி

  • வீதி நாய்கள் பாதுகாப்பு மற்றும் வீட்டு நாய்கள் இறந்ததன் பின்னர்  புதைத்தல், எரித்தலுக்காக  பிலியந்தலை  மற்றும் கெஸ்பேவ  பகுதியில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் வழங்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணத்துக்காக 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • மலையக மக்களுக்கு இந்திய அரசின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள குடியிருப்பு திட்டத்தைத் நிறைவு செய்ய 4290 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள 20 இலட்சம் ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி

  • 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் கடன் பெறும் எல்லை 60 மில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி

  • 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட தரவுகள் முறையாக செயற்படுத்தப்படும் - ஜனாதிபதி

  • அரச நிறுவனங்கள் தைரியமாக செயற்பட வேண்டும். தீர்மானிக்கப்பட்டதை போன்று நிதி ஒதுக்கப்படும் - ஜனாதிபதி

  • சட்டத்துக்கமைய செயற்படுவதை எவ்வாறு சர்வாதிகாரம் என்று குறிப்பிடுவது -ஜனாதிபதி எதிர்க்கட்சிகளிடம் கேள்வி

  • மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோர தீர்மானம் - ஜனாதிபதி

  • மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல்  முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் - ஜனாதிபதி

  • மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி

  • எதிர்க்கட்சித் தலைவர் ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - ஜனாதிபதி

  • ஜனநாயகத்துக்கு எதிரான அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போது  மனோ கணேசன் அதில் இல்லை என்று மேற்கோள் குறி ஊடாக குறிப்பிடுகிறேன் - ஜனாதிபதி

  • பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதீட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்  - ஜனாதிபதி வலியுறுத்தல்

  • போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி

  • வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி - ஜனாதிபதி

  • 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி  சுமார் நான்கரை மணித்தியாலங்கள் நிகழ்த்தி நிறைவு செய்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08
news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09