கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188ஆக அதிகரிப்பு 

07 Nov, 2025 | 01:42 PM
image

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக அதிகரித்துள்ளதாகவும் இதனால் அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸைத் தொடர்ந்து, வியட்நாமில் கல்மேகி புயல் ஏற்படுத்திய பெரும் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதன்படி, இந்தப் புயல் சுமார் 200 பேரை பலியெடுத்திருக்கிறது.

பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களில் கல்மேதி புயல் மிக மோசமான அனர்த்தமாக தெரிவிக்கப்படுகிறது.  

கல்மேகி புயலில் சிக்கி சுமார் 114 பேர்  உயிரிழந்ததாக நேற்று வியாழக்கிழமை (6) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 188 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த அனர்த்தத்தில் 135 வரை காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பசுபிக் கடலில் உருவான கல்மேகி புயல் கடந்த புதன்கிழமை (5) பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கடந்து, தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது. 

இதில் மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள சில தீவுப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதுடன் கனமழை பெய்ததையடுத்து, நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு முதலிய மாகாணங்கள் வெள்ளக்காடாயின. 

வீதியோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடற்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கொள்கலன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அனர்த்தத்தால் தாக்கப்பட்ட  பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதாகவும் மீட்புப் பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புயல் இன்று வியட்நாமின் மத்திய பகுதியை நெருங்கியுள்ளது. இதனால் வியட்நாமிலும்  சூறாவளி, பலத்த மழை, வெள்ளம் பாரியளவில் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. 

 இதனால் அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருகின்ற நிலையில், இன்றிரவு மத்திய வியட்நாமை கல்மேகி புயல் கடுமையாக தாக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43
news-image

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள்...

2026-09-06 18:41:17
news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 19:21:41
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08