நெடுந்தீவில் தொல்பொருள் சின்ன சேதம்: பிரதேச சபை தவிசாளர் உட்பட ஆறு பேர் கைது!

07 Nov, 2025 | 02:02 PM
image

நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வேற்று வியாழக்கிழமை (06) முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் வீதி அமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த பணியில் ஈடுபட்ட

இரண்டு பேர் நெடுந்தீவு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட நான்கு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இன்று கைது செய்யப்பட்டனர்.

கைதான குறித்த நான்கு பேரும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தமிழ் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படும் சில வருடங்களுக்கு முன்பு குறித்த பகுதி பௌத்த வரலாற்றுடன் தொடர்புடைய பகுதி என கடற்படையினரால் பதாகை போடப்பட்டு சர்ச்சை எழுந்த நிலையில் அந்த பதாகை நீக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08