இலங்கையின் நம்பிக்கையை வென்ற குடைகள் மற்றும் மழைக் கால அங்கிகள் வர்த்தக நாமமான Rainco, புதிய குடைத் தெரிவுகளை Be by Rainco எனும் நாமத்தின் கீழ் அறிமுகம் செய்துள்ளது.
தினசரி பயன்பாட்டுக்கு பொருத்தமான தனித்துவம் மற்றும் நவநாகரீக தோற்றத்தை வழங்கும் வகையில் இந்தத் தெரிவுகள் அமைந்துள்ளன.
தனித்துவம் மற்றும் சுய-வெளிப்பாட்டை மதிக்கும் புதிய தலைமுறை நுகர்வோருக்காக வடிவமைக்கப்பட்ட Be by Rainco தெரிவுகள், Rainco இன் நுணுக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், தினசரி பயன்படுத்தும் குடையை, பிரத்தியேக பாணிக்கான அடையாளமாக மாற்றியமைத்துள்ளது.
புதிய நாமத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு குடையும், வானிலையிலிருந்து பாதுகாப்பு வழங்குவது என்பதற்கு அப்பால், அழகிய தோற்றம் மற்றும் பயன்பாடு என்பவற்றுக்கிடையேயான சிறந்த சமநிலையை வழங்குகிறது. நுணுக்கமான அம்சங்களுடன், பிரத்தியேக அலங்காரங்கள் ஆக்கத்திறன் மற்றும் தனித்துவத்த்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளன.
Avarna Ventures (Pvt) Ltd இன் சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்க பிரிவின் குழும பொது முகாமையாளர் கயனி குணவர்தன அறிமுக நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “Be by Rainco என்பது எளிமையானதும், பலம் வாய்ந்த சிந்தனையாக அமைந்துள்ளது.
எடுப்பான, புதிய வடிவமைப்புகளில், உயர் தரமான முடிவுத் தோற்றத்தை வழங்கும் இந்தத் தெரிவுகள், மழை நாட்களிலும், வெயில் நாட்களிலும் பாவனையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்புடன், நவநாகரீக தோற்றத்தையும் வழங்குகிறது. ஒவ்வொரு தெரிவும், Rainco இன் வடிவமைப்புத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.
எளிமையால தருணங்களிலும், நம்பிக்கையுடன் தம்மை வெளிப்படுத்துவதற்கு புதிய தலைமுறைக்கான சுதந்திரத்தை வழங்கும் முறையாக Be by Rainco அமைந்துள்ளது.” என்றார்.
Be by Rainco தெரிவுகளில், நான்கு விசேடமான உள்ளம்சங்கள் காணப்படுகின்றன. நவநாகரீக தோற்றத்தை பேணுவதுடன், நீண்ட கால பாவனை மற்றும் சூரிய கதிர்களிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்கான UV-மேற்பூச்சு தெரிவுகளையும் இந்தக் குடைகள் வழங்குகின்றன.
முதலாவதாக, Style Canopy குடைகள், தினசரி பாவனைக்கு உகந்தவையாக அமைந்துள்ளன. உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், மழை அல்லது வெயிலிலிருந்து உங்களை பாதுகாத்திடும். அடுத்ததாக, Carry Easy தெரிவு எளிமையான எடை கொண்டதாகவும், சிறியளவானதாகவும் அமைந்திருப்பதால், கைப் பைகளில் கொண்டு செல்லக்கூடிய வசதியை வழங்குகின்றன.
Take a Pic தெரிவு என்பது, விசேட நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் தருணங்களுக்கு பொருத்தமான வகையில் அழகிய பூக்களின் அலங்காரங்களைக் கொண்டதாக அமைந்துள்ளன. Cloud Tears இல் மழை நாட்களுக்கு பொருத்தமான ஊடுருவல் காட்சியமைப்புகளை வழங்கும் தோற்றத்தை கொண்டுள்ளன.
Be by Rainco தெரிவுகளை நாடு முழுவதிலுமுள்ள நவநாகரீக பொருட்கள் விற்பனை நிலையங்களிலும், ஒன்லைனிலும் கொள்வனவு செய்ய முடியும். விலை ரூ. 1,499 முதல் ரூ. 2,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையை வென்ற தயாரிப்பாக தனது பாரம்பரியத்தை கட்டியெழுப்பியுள்ள Rainco, இளம் பாவனையாளர்கள் பயன்படுத்தும் அணிகலன்களை தமது தனித்துவத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கச் செய்வதில் காண்பிக்கும் நாட்டத்தை புரிந்து கொண்டுள்ளது.
வாழ்க்கைமுறைகளுக்கு பொருத்தமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் வியாபார ஈடுபாட்டைக் கொண்ட, இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான Avarna Ventures இனால் இயக்கப்படும் Rainco, தொடர்ந்தும் அலங்காரத்துக்கு முக்கியத்துவமளிக்கும் புத்தாக்கம் மற்றும் நோக்கின் அடிப்படையிலான வடிவமைப்பு ஆகியவற்றினூடாக உயர்வடைந்த வண்ணமுள்ளது.
இந்த குறிக்கோளின் பிரகாரம் Be by Rainco தோற்றம் பெற்றுள்ளது. நீடித்த பாவனை மற்றும் தரம் ஆகியவற்றுடன் கண்கவர் வடிவமைப்பு அம்சங்களினால் இந்த தெரிவுகள் செம்மையாக்கம் பெற்றுள்ளன. Gen Z தலைமுறையினரினதும், நவீன நகர வாழ்க்கைமுறைக்கும் பொருத்தமான தெரிவுகளாக அமைந்துள்ளன.
Rainco பல தசாப்தங்களாக, அதன் தரம், நீடித்த பாவனை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்காக புகழ்பெற்றுள்ளது. Be by Rainco எனும் புதிய நடவடிக்கையுடன், தம்மை சூழல் காரணிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அங்கியாக குடையை பயன்படுத்துவது மட்டுமன்றி, தனிப்பட்ட வெளிப்பாடுகளான தைரியம், நம்பிக்கை மற்றும் தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துமாறு புதிய தலைமுறையினரை அழைக்கிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலும் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM