மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கரப்பதாட்டம்: கிர்கிஸ்தானை அதிரவைத்த இலங்கை 3 நேர் செட்களில் வெற்றி

Published By: Vishnu

07 Nov, 2025 | 11:23 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரபந்தாட்ட சங்க (Central Asia Volleyball Association - CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பயின்ஷிப்பின் மூன்றாம் நாளான இன்று கிர்கிஸ்தானை அதிரவைத்து 3 நேர் செட்களில் இலங்கை அபார வெற்றியீட்டியது.

முழுப் போட்டியிலும் மிகத் திறமையான வியூகங்களுடன் விளையாடிய இலங்கை வீராங்கனைகள் முதல் தடவையாக இந்த சுற்றுப் போட்டியில் ஆக்ரோஷத்துடனும் வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்துடனும் விளையாடினர்.

முதலாவது செட்டில் 25 - 19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் இலங்கை வீராங்கனைகளின் முகங்களில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் காண முடிந்தது.

இரண்டாவது செட்டில் இரண்டு அணிகளும் சரி சமமாக மோதிக்ககொண்டவண்ணம் இருந்தன. இறுதியில் சமநிலை முறிப்பு முறையில் 27 - 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.

மூன்றாவது செட்டின் கடைசிக் கட்டத்தில் புத்திசாதுரியத்துடன் விளையாடி இலங்கை 25 - 22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று போட்டியை 3 - 0 என்ற நேர் செட்களில் கைப்பற்றியது.

இதேவேளை, மாலைதீவுக்கு எதிரான போட்டியில் 25 - 7, 25 - 10, 25 - 11 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில்  நேபாளம் வெற்றிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்காவை துவம்சம் செய்து ஒருநாள்...

2025-12-06 23:15:44
news-image

பீபா உலகக் கிண்ணம் 2026 -...

2025-12-06 23:13:18
news-image

நியூஸிலாந்துடனான டெஸ்டை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது...

2025-12-06 17:25:02
news-image

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு...

2025-12-05 23:21:18
news-image

வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக்...

2025-12-05 20:17:23
news-image

531 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி...

2025-12-05 14:56:49
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது இளையோர் 3 நாள்...

2025-12-05 14:00:08
news-image

இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச்...

2025-12-05 13:01:48
news-image

இலங்கையை மீளக் கட்டி எழுப்பும் நிதிக்கு...

2025-12-04 19:47:32
news-image

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்டில் டொம் லெதம்,...

2025-12-04 15:39:58
news-image

லிவிங்ஸ்டோன் அதிரடி துடுப்பாட்டம்;  அபு தாபி...

2025-12-04 15:28:47
news-image

இந்தியாவுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-12-04 04:52:56