நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன் கொலை வழக்கு' படத் தொடக்க விழா

06 Nov, 2025 | 04:56 PM
image

தமிழ் சினிமாவில் நம்பிக்கை வழங்கும் வகையில் நட்சத்திர நடிகராக வளர்ச்சி பெற்று வரும் நடிகர் வெற்றி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு 'எனும் திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

'கொன்றால் பாவம்', 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகும் 'லஷ்மி காந்தன் கொலை வழக்கு' எனும் திரைப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, லிசி அண்டனி, 'பருத்திவீரன்' சரவணன், 'லொள்ளு சபா' மாறன், இளவரசு, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

கிரைம் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை  2 M சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வி. சபரீஷ் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''லட்சுமி காந்தன் கொலை வழக்கு என்பது இயல்பாக கடந்து செல்லக்கூடிய குற்றச் சம்பவம் அல்ல. தமிழ் சினிமாவின் வரலாற்றில் நடைபெற்ற அந்த உண்மை சம்பவத்தை - வித்தியாசமான கோணத்தில் விவரிக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகா சேனா - திரைப்பட விமர்சனம்

2025-12-13 15:47:09
news-image

டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் பார்வதி...

2025-12-13 15:16:44
news-image

அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'...

2025-12-13 15:13:47
news-image

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா'...

2025-12-13 15:09:32
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட விக்ரம் பிரபு...

2025-12-12 18:14:32
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும்'ஆர்யா 40' படத்...

2025-12-12 18:12:33
news-image

பின்னணி குரல் பதிவு பணியில் பரபரப்பாக...

2025-12-12 18:10:46
news-image

சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் 'ராசாதி...

2025-12-12 18:09:02
news-image

தி கேரம் குயின்' எனும் திரைப்படமாக...

2025-12-12 18:06:55
news-image

ஜனவரியில் வெளியாகும் புதுமுகங்கள் நடிக்கும் 'டியர்...

2025-12-12 18:04:49
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'கொம்பு...

2025-12-12 18:02:56
news-image

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு...

2025-12-12 17:55:53