செல்ல பிராணியான நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணராக ஸ்ரீகாந்த் நடித்திருக்கும் 'தி ட்ரெயினர்'

06 Nov, 2025 | 04:56 PM
image

போதை பொருள் பாவனை தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் கதையின் நாயகனாக-  செல்லபிராணியான நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணராக - நடித்திருக்கும் 'தி ட்ரெயினர் ' எனும் திரைப்படம் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ செயலியான 'காவலன் செயலி'யின் முக்கியத்துவத்தை விவரிக்கும் வகையில் அதிரடி திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வேல் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ' தி ட்ரெயினர் ' எனும் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் , ஷாம் , பிரின்ஸ் சால்வின்,  ஜூனியர் எம்ஜிஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருள்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் நீலா  தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழக காவல்துறை உருவாக்கிய காவலன் எனும் செயலியின் செயல்பாட்டிலிருந்து உத்வேகம் பெற்று சமூக பொறுப்புடன் அதிரடி திரில்லர் திரைப்படமாக 'தி ட்ரெயினர் 'உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் 'லீ 'எனப்படும் செல்லப் பிராணியான நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகா சேனா - திரைப்பட விமர்சனம்

2025-12-13 15:47:09
news-image

டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் பார்வதி...

2025-12-13 15:16:44
news-image

அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'...

2025-12-13 15:13:47
news-image

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா'...

2025-12-13 15:09:32
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட விக்ரம் பிரபு...

2025-12-12 18:14:32
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும்'ஆர்யா 40' படத்...

2025-12-12 18:12:33
news-image

பின்னணி குரல் பதிவு பணியில் பரபரப்பாக...

2025-12-12 18:10:46
news-image

சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் 'ராசாதி...

2025-12-12 18:09:02
news-image

தி கேரம் குயின்' எனும் திரைப்படமாக...

2025-12-12 18:06:55
news-image

ஜனவரியில் வெளியாகும் புதுமுகங்கள் நடிக்கும் 'டியர்...

2025-12-12 18:04:49
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'கொம்பு...

2025-12-12 18:02:56
news-image

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு...

2025-12-12 17:55:53