'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

06 Nov, 2025 | 04:55 PM
image

அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க' எனும் திரைப்படம் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிரடி எக்சன் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள் குமார் தயாரித்திருக்கிறார்.

இதில் முதன்மை கதாபாத்திரங்களுடன் 'பிக் பொஸ்' அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு ,ராம்குமார் , தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல் , பிரியதர்ஷினி, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், ஓ எ கே சுந்தர், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right