குறட்டை விடுவதற்கு உடல் எடை அதிகம் மட்டும்தான் காரணமா..?

06 Nov, 2025 | 04:55 PM
image

இயல்பான எடையை விட கூடுதலான எடையுடன் இருப்பவர்கள் அதிக அளவில் குறட்டை பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் குறட்டை பாதிப்பு ஏற்படுவதற்கு உடல் எடை அதிகம் மட்டுமே காரணம் அல்ல. வேறு பல காரணங்களும் உண்டு என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

உடல் எடையை சீராக பராமரித்து வருபவர்களும் இரவு நேர உறக்கத்தின் போது குறட்டை பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். பொதுவாக  மூக்கு பகுதியில் இருந்து தொடங்கும் காற்றின் பயணமானது மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பயணிக்கிறது.

இவை பயணிக்கும் பகுதிகளில் ஏதேனும் அனாடமி என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் உடலியல் அமைப்புகளில் ஏதேனும் அசௌகரியங்கள் - தடைகள் - மாற்றம்- இருந்தால் அதன் காரணமாகவும் குறட்டை பாதிப்பு ஏற்படும்.

உதாரணமாக மூக்கு பகுதியில் உள்ள தண்டுகள் நேராக இருக்க வேண்டும். இவை சற்று வளைவுடன் அமைப்பு ரீதியாக மாறுபட்டிருந்தால் இதனால் காற்றின் பயணத்தில் தடை ஏற்படும்.

இதனைத் தொடர்ந்து தொண்டை பகுதியில் உள்ள டான்சில், அடினாய்ட்ஸ் ஆகிய பகுதிகள் இயல்பான அளவை விட சற்று கூடுதலாக இருந்தால் இதன் காரணமாகவும் காற்று பயணத்தில் தடை ஏற்பட்டு, குறட்டை உண்டாகும். இதற்கும் உடல் எடைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும் இத்தகைய உடலியல் அமைப்பில் ஏற்படும் வேறுபாட்டாலும் பலருக்கு குறட்டை பாதிப்பு ஏற்படக்கூடும்.‌

மேலும் இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு குறட்டை பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்திய நிபுணர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அதன் அடிப்படையில் சிறிய அளவிலான சத்திர சிகிச்சை அல்லது பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை மேற்கொண்டு இதிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வைத்தியர் தீபா செல்வி
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31
news-image

சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான நவீன சத்திர...

2026-06-30 17:12:11
news-image

பற்களை இழந்தவர்களுக்கு வர பிரசாதமான சைகோமா...

2026-06-29 16:50:27