ஒவ்வொரு மனிதர்களும் மூன்றெழுத்து தொடர்பான வார்த்தைகளுடன் ஆயுள் முழுவதும் விட்டுப் பிரியாத பந்தம் இருக்கும். அந்த மூன்றெழுத்துகளில் முதன்மையானது கடன். கடன் வாங்காதவர்களும் யாரும் இல்லை. கடன் கொடுக்காதவர்களும் யாரும் இல்லை.
ஏதேனும் ஒரு வகையில் நாம் அறிமுகமானவர்களிடமோ அல்லது அறிமுகமற்றவர்களிடம் கூட சில தருணங்களில் கடன் பெற்றிருப்போம். அதனை திருப்பி செலுத்தும் போது மனதுக்குள் மகிழ்ச்சி இல்லை என்றாலும்.. எம்முடைய மூளையில் இது தொடர்பான மன நிறைவு பதிவு செய்யப்படுகிறது. இது அக மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாகவே எம்மில் பலரும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என எப்போதும் விரும்புகிறார்கள். திருப்பி செலுத்த வேண்டும் என்று நினைத்தாலும் தொடர் சூழல் காரணமாக எம்மால் அதனை திருப்பி செலுத்த முடிவதில்லை. இதன் காரணமாக அதன் வட்டி விகிதம் அதிகரித்து சுமையாகிவிடுகிறது. இது மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் உண்டாக்குகிறது.
இதிலிருந்து விடுபடுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல்வேறு வகையினதான குறிப்புகளை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: கொள்ளு எனும் தானியம், ரோசாப்பூ மாலை. தேங்காய் எண்ணெய் , இரண்டு அகல் விளக்கு ,திரி.
ஒரு செவ்வாய் கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள். அந்த செவ்வாய் கிழமையில் எம கண்ட தருணத்தை ( காலை 9 முதல் 10:30 வரை) முதன்மையாக தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த குறிப்பிட்ட நாள் மற்றும் குறிப்பிட்ட தருணத்தில் அருகில் இருக்கும் ஆலயத்தில் உள்ள விநாயகர் சன்னதிக்கு சென்று அவருக்கு கொள்ளுவைச் சமர்ப்பித்து, ஏழு முறை வலம் இருந்து இடமாக சுற்றி வந்து உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.
அதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகம் அனுமதி அளித்திருக்கும் இடத்தில் சிறிது கொள்ளுவை வைத்து அதன் மீது இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி தீபமேற்றி வழிபட வேண்டும். இந்த தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு நீங்கள் எடுத்துக் கொண்டு சென்றிருக்கும் ரோஜாப்பூ மாலையை விநாயகருக்கு சாற்றி மீண்டும் ஒருமுறை உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.
இதன் பிறகு நீங்கள் கடன் பெற்றிருக்கும் நபர் அல்லது வங்கிகளுக்கு குறிப்பிட்ட நாள் மற்றும் குறிப்பிட்ட தருணத்தில் சிறிதளவு தொகையை ஏழு என்ற எண்ணிக்கையிலான கொள்ளு உடன் சேர்த்து கடனை திருப்பி செலுத்த தொடங்குங்கள்.
இந்த முறையை நீங்கள் பின்பற்றத் தொடங்கினால் ஓராண்டிற்குள் உங்களால் கடனை திருப்பி செலுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையும். கடன் கொடுத்தவர்கள் உங்கள் மீதான அவநம்பிக்கையை குறைத்துக் கொண்டிருப்பதையும்.. உணர்ந்து கொள்ளலாம். இதனை தொடர்ச்சியாக பாவிக்கும் போது உங்களுடைய கடன் விரைவில் தீரும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM