மருந்துகள் பற்றாக்குறையை போக்க இந்தியா ஆதரவளிக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை

06 Nov, 2025 | 03:40 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மருத்துவத் துறையில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறைக்கு தீர்வு காண இந்திய அரசின் ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்து, கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் தேசிய சுகாதார கட்டமைப்பினூடாக பல தசாப்த காலமாக இலவச சுகாதார வசதிகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போது  அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் பல மருந்துகளின்  பற்றாக்குறை, அவற்றைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதித்துள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு சில மருந்துகள் தனியார் துறையினூடாக மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியுமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அரச மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் அச்சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்தியா வழங்கும் அவ்வொத்துழைப்பை மரியாதையுடன் வரவேற்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் இலங்கையின் சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் கடந்த காலத்தில் வழங்கிய பங்களிப்பையிட்டும் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்தார்.

குறிப்பாக,  2016  ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்ட 1990 - சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அச்சேவையை அறிமுகம் செய்ததன் ஊடாக நாடு முழுவதும்  அவசர மருத்துவ பதிலளிப்பு கட்டமைப்பு வலுவடைந்ததாகவும், அது 'உயிர் காக்கும் கூட்டாண்மை' என விவரிக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது, ஒளடத ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது மற்றும் அனைவருக்கும் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியம் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் விரிவாக கலந்துரையாடினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேச தளங்களில்...

2026-07-22 19:28:24
news-image

அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்; மக்களுக்காக தொடர்ந்து குரல்...

2026-07-22 19:22:06
news-image

ஜெஃப்ரி பாவா - மூனமல் விருது...

2026-07-22 19:13:47
news-image

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை...

2026-07-22 19:16:23
news-image

செம்மணி புதைகுழி அகழ்வு: 40ஆவது நாளில்...

2026-07-22 19:09:26
news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08