லண்­டனில் நடை­பெற்று வரும் உலக தட­கள போட்­டியில், நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்­டத்தில் தென்­னா­பி­ரிக்க வீரர் வான் நியரிக் தங்க பதக்கம் வென்றார்.

உலக தட­கள சம்­பியன் ஷிப் போட்டி லண்­டனில் நடை­பெற்று வரு­கி­றது. இதில் ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்­டத்தில் பங்­கு­பற்­றிய தென்­னா­பி­ரிக்க வீரர் வான் நியரிக் பந்­தய தூரத்தை 43.98 வினா­டிகளில் கடந்து தங்­கப்­ப­தக்கத்தை வென்றார்.

பஹமாஸ் வீரர் ஸ்டீபன் 44.41 வினா­டிகளில் கடந்து வெள்­ளிப்­ப­தக்­கத்தையும், கட்­டாரைச் சேர்ந்த ஹாரூன் 44.48 வினா­டிகளில் கடந்து வெண்­கல பதக்­கத்தையும் வென்­றனர். 

இதே­வேளை 800 மீற்றர் ஓட்­டத்தில் பிரான்ஸ் வீரர் பியா அம்ரோஸ் தங்கம் வென்றார். அவர் பந்­தய தூரத்தை 1 நிமிடம் 44.67 வினா­டிகளில் கடந்தார். போலந்து வீரர் அடம் காஸ்கோட் வெள்­ளியும் (1 நிமிடம் 44.95 வினாடி), கென்­யாவை சேர்ந்த கிபி யான் வெண்­க­லமும் (1 நி. 45.21 வினாடி) வென்றனர்.

3 ஆயிரம் மீற்றர் ஸ்டீபிள் சேஸ் பந்­த­யத்தில் கென்யா வீரர் கிப்­ருட்டோ தங்கம் வென்றார்.