மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கரப்பந்தாட்டம்: நேபாளத்திடம் இலங்கை தோல்வி

Published By: Digital Desk 3

06 Nov, 2025 | 01:46 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க (CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நேபாளத்திடம் இலங்கை தோல்வி அடைந்தது.

புதன்கிழமை மாலை நடைபெற்ற போட்டியில் 1 - 3 என்ற செட்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியைத் தழுவியது.

முதல் இரண்டு செட்களில் 18 - 25, 24 - 26 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்திடம் தோல்வி அடைந்த இலங்கை, 3ஆவது செட்டில்  திறமையாக விளையாடி 25 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆனால், 4ஆவது செட்டில் அநாவசியமாக தவறுகளை இழைத்ததால் இலங்கை 20 - 25 என தோல்வி அடைந்தது.

இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற கிர்கிஸ்தானுக்கும் மாலைதீவுகளுக்கும் இடையிலான போட்டியில் கிர்கிஸ்தான் மிக இலகுவாக 3 நேர் செட்களில் (25 - 21, 25 - 9, 25 - 21) வெற்றிபெற்றது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று கிர்கிஸ்தானை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. மற்றைய போட்டியில் நெபாளமும் மாலைதீவுகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம்...

2026-08-09 13:33:39
news-image

ரெட் ஸ்டார் உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி...

2026-08-09 12:54:45
news-image

மூன்று எல்பிஎல் அத்தியாயங்களில் Jaffnaவிடம் தோல்வி...

2026-08-09 11:13:57
news-image

முகத்துவாரம் குளோபல் சிறுவர் முன்பள்ளி தந்தையர்...

2026-08-08 23:22:32
news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51