(நெவில் அன்தனி)
இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான மாபெரும் ஏலத்திற்கு முன்னதாக இந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி அணி நாயகிகளான ஹாமன்ப்ரீத் கோர், ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகியோர் அந்தந்த அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் கடைசிக் கட்டத்தில் உலகக் கிண்ண அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஷபாலி வர்மாவும் அவரது அணியினால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
எனினும், உலகக் கிண்ணத்தில் தொடர் நாயகியான தீப்தி ஷர்மா, அவுஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹலீ, நியூஸிலாந்து சகலதுறை வீராங்கனை அமேலியா கேர் ஆகியோர் முந்தைய அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தலா 5 வீராங்கனைகளையும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 வீராங்கனைகளையும் தக்கவைத்துக்கொண்டுள்ளன.
குஜராத் ஜயன்ட்ஸ் 2 வீராங்கனைகளையும் UP வொரியர்ஸ் ஒரு வீராங்கனையையும் தக்கவைத்துள்ளன.

அணிகளும் தக்கவைக்கப்பட்டுள்ள வீராங்கனைகளும்
டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: அனாபெல் சதர்லண்ட், மாரிஸ்ஆன் கெப், ஜெமிமா ரொட்றிக்ஸ், ஷபாலி வர்மா, நிக்கி ப்ரசாத்.
மும்பை இண்டியன்: ஹாமன்ப்ரீத் கோர், நெட் சிவர் - ப்றன்ட், ஆமன்ஜோத் கோர், குணாலன் கமலினி, ஹேலி மெத்யூஸ்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்ம்ரித்தி மந்தனா, எலிஸ் பெரி, ரிச்சா கோஷ், ஷ்ரெயன்கா பட்டில்.
குஜராத் ஜயன்ட்ஸ்: ஏஷ்லி கார்ட்னர், பெத் மூனி.
UP வொரியர்ஸ்: ஷ்வேட்டா செஹ்ராவத்.
மகளிர் பிறீமியர் லீக் விதிகளின் பிரகாரம் ஒவ்வொரு அணியும் விரும்பினால் அதிகபட்சமாக மூன்று இந்திய வீராங்கனைகளையும் இரண்டு வெளிநாட்டு வீராங்கனைகளையும் இரண்டு புதிய இந்திய வீராங்கனைகளையும் தக்கவைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு அணியில் ஒரு புதிய இந்திய வீராங்கனை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மகளிர் பிறீமியர் லீக் 2026 வீராங்கனைகளுக்கான மாபெரும் ஏலம் டெல்லியில் இம் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தொகையாக 15 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM