போஸ்னியா முதியோர் இல்லத்தில் தீவிபத்து: 11 பேர் உயிரிழப்பு ; 30 பேர் காயம்

06 Nov, 2025 | 12:45 PM
image

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 30 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துஸ்லாவில் உள்ள அந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், இதற்கான காரணம் இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

போஸ்னியா ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, வளாகத்தின் மேல்தளங்களில் நடக்க முடியாத முதியவர்கள் மற்றும்  நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களும் அடங்குவதாகவும், நிலைமையை மதிப்பிடுவதற்காக நேற்று புதன்கிழமை (05) அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதாக துஸ்லா மேயர் ஸிஜாத் லுகாவிக் தெரிவித்தார்.

அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசிக்கும் ருசா காஜிக் என்ற பெண், தூங்கச் சென்ற போது  “வெடிக்கும் சத்தங்கள்” கேட்டதாகவும், மேல்தளங்களிலிருந்து தீப்பிழம்புகள் விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 16...

2025-12-15 09:06:09
news-image

தேர்தலில் கட்சி தோல்வி: மீசையை இழந்த...

2025-12-14 23:05:12
news-image

அவுஸ்திரேலிய தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு ...

2025-12-14 20:12:43
news-image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; 12...

2025-12-14 17:18:20
news-image

நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி,...

2025-12-14 12:52:11
news-image

காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் :...

2025-12-14 11:30:18
news-image

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர்...

2025-12-14 07:33:32
news-image

மெஸ்ஸியின் இந்திய வருகை ; கொல்கத்தா...

2025-12-13 15:44:46
news-image

யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த...

2025-12-13 12:15:57
news-image

தாய்லாந்து – கம்போடியா தாக்குதல் தொடரும்...

2025-12-13 12:03:09
news-image

லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு...

2025-12-13 10:23:23
news-image

அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் வரலாறு காணாத...

2025-12-13 11:23:41