நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி

Published By: Digital Desk 1

06 Nov, 2025 | 10:24 AM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுராதபுரம் - பாதேனிய வீதியில் கும்புக்கஹமுல சந்திக்கு அருகில், நேற்று (05) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அநுராதபுரம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியில் வலதுபுறம் திரும்பும்போது பின்னால் வந்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்த ஒருவர், வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநெரம், பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி - பியகம வீதியில் ரக்கஹவத்த பகுதியில் பியகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள சமிக்ஞை தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மல்வானை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதவாச்சி - ஹொரவபொத்தான வீதியில் வேன் ஒன்று, வீதியோரத்தில் நின்றிருந்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உல்பத்கம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், ஹோமாகம - வலவ்வ சந்தி - உனபந்துர சந்தி வீதியில் நகரசீமா மாவத்தை அருகே உனபந்துர சந்தி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணியொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41