முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்ணம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரட்ணம் கடந்த நவம்பர் 4ம் திகதி கேகாலை அக்குருவெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.