போதைப்பொருள் மற்றும் ஊழலை ஒழிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

Published By: Vishnu

06 Nov, 2025 | 12:43 AM
image

(எம்,ஆர்.எம்.வசீம்)

எமது தேசத்தின் இரண்டு கொடிய சக்திகளான போதைப்பொருள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. சிறைக்கைதிகளின் அதிகமானவர்கள் துரதிஷ்டமான சமூக பின்புலத்தில் இருந்து வந்தவர்களாகும். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 5அல்லது 6ஆம் தரத்துக்கு பின்னர் பாடசாலை கல்வியில் இருந்து விலகியவர்களாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பயிற்சி காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறிச்செல்லும் சிறைச்சாலை அதிகாரிகளின் நிகழ்வு 5ஆம் திகதி புதன்கிழமை அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

எமது அரசாங்கத்தின் கீழ் நீதி குறிப்பிட்ட ஒரு  சிலரின் வரப்பிரசாதம் அல்லாமல் அனைவரதும் உரிமையாகும் என்ற ஆட்சி முறைக்கு பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது மக்களின் அதிகாரங்களை மக்களுக்கே திருப்பி கொடுக்கும் அரசாங்கமாகும். மக்களிடமிருந்து எதனையும் பறித்துக்கொள்ளும் அரசாங்கம் அல்ல. அரச நிறுவனங்கள் மற்றும் சட்டம் தொடர்பில் மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்புதல், மோசடிகளை இல்லாதொழித்தல் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து விடங்களும் உண்மைத்தன்மை, சாதாரணதன்மை மற்றும்  மக்கள் எற்புடையதாக பிரதிபலிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். 

நீதியை நிலைநாட்டும் முறைமை ஒன்றை கட்டியெழுப்பும் பொறுப்பு நீதி அமைச்சுக்கு முன்னால் இருக்கிறது. சட்டத்தை நிலைநாட்டும்போது அது தண்டனை பெற்றுக்கொடுப்பதாக கருதாமல் புதிய ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் வழியாக வேண்டும்.

எமது சிறைச்சாலை கட்டமைப்பை மறுசீரமைப்பது இந்த அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாக கருதி செயற்படுவோம். சிறைச்சாலைகள் தண்டனை பெற்றுக்கொடுக்கும் இடம் அல்ல, மாறாக அது வாழ்க்கைக்கு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்கும் மாற்றத்தின் பாடசாலையாக மாற்றபட வேண்டும். சிறைப்படுத்தப்படும் சிறைக்கைதிகளின் அதிகமானவர்கள் துரதிஷ்டமான சமூக பின்புலத்தில் இருந்து வந்தவர்களாகும். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 5அல்லது 6ஆம் தரத்துக்கு பின்னர் பாடசாலை கல்வியில் இருந்து விலகியவர்களாகும்.

பெரும்பாலும் குற்றச்செயல்களின் அடிப்படையாக இருப்பது தனி நபரின் செயற்பாடுகள் அல்ல.மாறாக சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் பாகுபாடு காட்டுவதாகும். சிறைப்படுத்தப்படும் அனைத்து கைதிகளும் திறமையான ஒழுக்கமுள்ள மற்றும் மனிதாபிமானமுள்ள குடிமகனாக அதில் இருந்து வெளியேறிச் செல்லவேண்டும்.  

மேலும் எமது தேசத்தின் இரண்டு கொடிய சக்திகளான போதைப்பொருள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. பல தசாப்தங்களாக, சிறைச்சாலை  என்ற வார்த்தை சமூகத்தில் ஒரு பய உணர்வை உருவாக்கி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

அந்த நிலை மாற்றப்பட வேண்டும், சிறைச்சாலைகள் புனர்வாழ்வு, ஒழுக்கம் மற்றும் தார்மீக அபிவிருத்தியை மேற்கொள்கின்ற மீட்பு  நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும். அதனால் சிறைச்சாலை கட்டமைப்பை வெளிப்படைதன்மையாகவும் பொறுப்புக்கூறக்கூடிய கட்டமைப்பாகவும் மாற்றுவது எமது அரசாங்கத்தின் இலக்காகும்

சிறைச்சாலைகள் என்பது எதிர்பார்ப்புக்களை சிதைக்கும்  சித்திரவதை கூடங்கள் அல்ல. மாறாக வாழ்க்கை தொடர்பில் எதிர்பார்ப்புகளை ஒளிரவிடும் வேலைத்தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் கைது...

2025-12-13 13:43:47
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை...

2025-12-13 15:25:09
news-image

நான்கு பேருடன் பயணித்த வேன் கால்வாயில்...

2025-12-13 13:27:28
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப்...

2025-12-13 15:00:57
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30