அக்கராயன் உணவகத்தில் சுகாதார சீர்கேடு ; உரிமையாளருக்கு 20,000 அபராதம்

05 Nov, 2025 | 04:51 PM
image

கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட அக்கராயன் பகுதியில் செயற்பட்டு வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அக்கராயன் பொதுச் சுகாதார பரிசோதகர் இராசலிங்கம் விதுஷன் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி குறித்த உணவகத்தை பரிசோதனை செய்தபோது, பல்வேறு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

அதன்படி, தனிநபர் சுத்தம் பேணாமலும், ஏப்ரன், தொப்பி, கையுறை அணியாமலும் ஊழியர்கள் உணவை கையாள அனுமதித்தமை, சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை தொற்று ஏற்படக்கூடிய வகையில் ஒன்றாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, செல்லுபடியான மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவு கையாண்டமை,உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் இடங்களில் இலையான்கள் காணப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்கள் பதிவாகியிருந்தன.

இதனையடுத்து அக்கராயன் சுகாதாரப் பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை (04) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் குறித்த உணவக உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதத்தையும், ரூ.100,000 பெறுமதியான சரீர பிணையையும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49
news-image

சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி...

2025-11-10 16:24:58
news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20