வருமான வரி பதிவாளர்கள் இம்மாதத்துக்குள் வரி விபரத்திரட்டை சமர்ப்பிக்க வேண்டும் வரி விபரத்திரட்டை சமர்ப்பிக்காதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

05 Nov, 2025 | 04:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2024 / 2025  மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை  எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வருமான வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக,  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2024 /  2025  மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வருமான வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலதிக தகவல்களை 1944 அல்லது  www.ird.gov.lk     என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி பிராந்திய அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 16:08:18
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43
news-image

முல்லைத்தீவு மாத்தளன் சிறுகடலில் அதிர்ச்சி: இலட்சக்கணக்கான...

2026-09-07 14:46:14
news-image

தாய்லாந்து செல்ல வீசா இல்லா அனுமதி...

2026-09-07 14:37:13
news-image

யோஷித ராஜபக்‌ஷ தனது மேல்முறையீட்டை மீளப்...

2026-09-07 14:25:56
news-image

தூய்மையான நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர...

2026-09-07 14:17:54