நிதிக் கொள்கை தொடர்பில் பதிலளிக்க பாராளுமன்றத்துக்கு வருகை தர தயார்! - மத்திய வங்கி ஆளுநர்

05 Nov, 2025 | 04:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நிதிக் கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க எமக்கு அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்துக்கு வருகைத் தருவதற்கு எமக்கு பிரச்சினையேதும் இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற அரச நிதி பற்றிய குழுவில் முன்னிலையானபோது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நிதி கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பும் போது முறையான பதில் கிடைப்பதில்லை, பாராளுமன்றத்துக்குள் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் கிடையாது என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிதியமைச்சரிடமே நேரடியாக கேள்விகேட்பார்.

எழுப்பப்படும் கேள்விகள் குறித்து நிதியமைச்சர் எம்முடன் கலந்துரையாடுவார். தேவைப்படும் பதிலுக்கான கேள்வி ஒருநாளைக்கு முன்னதாகவே எமக்கு கிடைக்கப்பெறும்.

முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு எவ்வழியிலாவது பதிலளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.விடைகளை நிதியமைச்சருக்கு அனுப்பி வைப்போம்.இதுவே பின்பற்றப்படும் வழிமுறை.

நிதியமைச்சர் ஊடாக அனுப்பிவைக்கப்படும் சகல கேள்விகளுக்கும் உரிய காலப்பகுதியில் நாங்கள் பதிலளித்துள்ளோம் என்பதை என்னால் உறுதியாக குறிப்பிட முடியும்.

முன்வைக்கப்படும் ஒருசில கேள்விகள் மத்திய வங்கிக்கு மாத்திரம் உரித்தானது அல்ல, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி, அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் விடைகளை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சர் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விடைகளை வழங்குவார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க எமக்கு அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்துக்கு வருகைத் தருவதற்க்கு எமக்கு பிரச்சினையேதும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06
news-image

சர்ச்சையை ஏற்படுத்திய மகா சங்கத்தினரின் கடிதம்...

2026-08-12 14:28:29