முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனு'க்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இது குறித்து கருத்து தெரிவித்தார்...
அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது சேவைகள் தொடர்பில் சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும். அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம்.
மாறாக திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை. இது வழமையான நடைமுறையாகும். சில துறைகளில் சேவை நீடிப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அங்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கு பொறுத்தமானவர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.
எனவே தான் அங்கு ஓய்வு பெறவிருந்த அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கும். எனவே முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனது சட்டத்துறைசார் சேவை மீது என்றும் எமக்கு மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM