மட்டக்களப்பில் காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

05 Nov, 2025 | 02:44 PM
image

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் சிலர் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் போலி காணி உறுதிகளைக்கொண்டு காணிகளை அபகரிக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி புதன்கிழமை (05) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை கல்லடி பாலத்திற்கு அருகில் முன்னெடுத்தனர்.

ஆட்சியாளர்களின் பாராமுகமான நிலையினால் பாதிப்பினை சந்திக்கும் மக்கள்,உhயி அதிகாரிகளே கவனம் எடுத்து அரசகாணியினை பாதுகாத்துதாருங்கள், அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினால் காணியில் அடிக்கடி அத்துமீறல் யார்,யாருக்கு உடந்தை,அரசாங்க அதிகாரிகளின் கவனயீனத்தால் மூழ்கப்போகும் மக்கள் குடியிருப்புகள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போலி காணி உறுதிகளை செய்து மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள் அரச அதிகாரிகளின் துணையுடன் நீதிமன்றங்களை பிழையான வகையில் வழிநடாத்தி அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்திற்கு அருகில் காணப்படும் நீண்டகாலமாக வடிச்சல்காணியாகவுள்ள நிலையில் அதனை அடைத்து நிரப்புவதனால் எதிர்காலத்தில் குறித்த பகுதியானது கடுமையான வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாவதுடன் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதிகளும் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05
news-image

சட்டவிரோதமாக இராமேஸ்வரத்திற்கு சென்ற இலங்கை பிரஜைக்கு...

2025-11-08 13:56:49
news-image

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கசிப்பு...

2025-11-08 12:51:52
news-image

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-11-08 12:35:59
news-image

ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதாரப் பீடத்தின்...

2025-11-08 12:27:42