20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண கால்பந்தாட்டம் : மூன்றாவது கால் இறுதியில் புனித சூசையப்பர் - றோயல்

05 Nov, 2025 | 01:59 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி நடத்தும் 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் கடைசி இரண்டு கால் இறுதிப் போட்டிகள் இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.

இந்த இரண்டு கால் இறுதிப் போட்டிகளும் கொம்பனித் தெரு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

புனித சூசையப்பர் கல்லூரிக்கும் றோயல் கல்லூரிக்கும் இடையிலான 3ஆவது கால் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு அணிகளும் ஓரளவு சமபலம் வாய்ந்தவை என்பதால் இப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனித சூசையப்பர் கல்லூரி அணி தனது ஆரம்பப் போட்டியில் கேட்வே கல்லூரி அணியிடம் 1 - 3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்தது.

எனினும் அடுத்த இரண்டு போட்டிகளில் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியை 5 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்திலும் வெற்றிகொண்டதன் மூலம் புனித சூசையப்பர் கல்லூரி அணி கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இதேவேளை, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியை 5 - 0 என வெற்றிகொண்ட றோயல் கல்லூரி அணி, கடைசிப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியிடம் 0 - 1 என தோல்வி அடைந்தது.

இதனிடைய ஏறாவூர் அலிகார் கல்லூரி அணிக்கு எதிராக றோயல் கல்லூரி அணிக்கு போட்டியின்றி வெற்றி அளிக்கப்பட்டது.

அணிகள்

புனித சூசையப்பர் கல்லூரி: பி.டி. விஸ்மித்த, ரி. குணசேகர, எஸ். பாலசூரிய, ஜே. நிக்கில் ஹென்றி, பி. கஹட்டகஹாவத்த, எம். பிரியதர்ஷன, என். சால்தீன், தினித் யோஷித்த பெர்னாண்டோ, இசுறு சானுக்க, இஷான் சால்தீன், வி. ஹரிஷ், எச். விதலன், எஸ். ஹன்னதிகே, யசஸ்வின் திரிமான்ன, சந்தேஷ் ரத்நாயக்க, டபிள்யூ. ஜயசுந்தர, ஹிருன் மிராஷ, ஏ. திரிமான்ன. பயிற்றுநர்: அருண சம்பத்த.

றோயல் கல்லூரி: ஏ. ரஹ்மான், அக்கிந்து ரன்துல, ஏ. நோனிஸ்,ஏ. அர்மாஷ், டபிள்யூ. அமரசிங்க, ரஷாத் ஷிஹாப், மினோல் வொட்சன், கே.டி. ஸ்டெய்ன்வோல், எஸ்.சித்தார்த், அத்தீக் நயீமுதீன், வை.ஆர். அக்மர், ஏ.பிலால்,எஸ். அரங்கல, ஆர். ருக்ஷான், அப்துல் ரஹ்மான், அஸ்மான் கான், லோஜியன் ஜெயபாலன், டி. பெரேரா, என். இமான், அஸ்டன் ஹேக்கன், எப். மொஹம்மத், டி. சாவிந்த. பயிற்றுநர்: ஏ. ஜே. சில்வா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட...

2026-07-21 15:14:26
news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44