அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (04) காலை 10.30 மணியளவில் காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்த்தகர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்ககொள்ள நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இந்நிலையில், துப்பாக்கிதாரிகள் பயணித்ததாக கூறப்படும் சிவப்பு நிற கார் ஒன்று கரந்தெனிய - மஹலுதண்ட பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கரந்தெனிய சுத்தா” என்பவரின் மைத்துனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை நகர சபைக்கு போட்டியிட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் 04 ஆம் திகதி மீட்டியாகொடை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் மீட்டியாகொடை “ மஹதுர நலின்” உட்பட இருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மீட்டியாகொடை “ மஹதுர நலின்” உட்பட இருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டமைக்கும் “கரந்தெனிய சுத்தா”வுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM