தகாத உறவால் இராணுவ சிப்பாய் கொடூரமாக கொலை!

05 Nov, 2025 | 11:32 AM
image

அம்பாறையில் மகாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொரபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகாஓயா , சமகிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

கொலைசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றுமொரு இராணுவ சிப்பாயின் மனைவியுடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார். 

சம்பவத்தன்று, கொலைசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய், சந்தேக நபரின் மனைவியுடன் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளார். 

இதன்போது வீட்டிற்கு சென்ற சந்தேக நபர், இராணுவ சிப்பாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து 34 வயதுடைய சந்தேக நபர்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 15:31:57
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54
news-image

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

2025-11-10 12:44:07