உலக உணவுத் திட்ட பிரதிநிதி - நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் சந்திப்பு

05 Nov, 2025 | 11:46 AM
image

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான  பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டு (Mr.Philip Ward)  மற்றும் அரசாங்க நட்புறவு அதிகாரி (government partnership officer) முஸ்தபா நிஹ்மத் (Mr.Musthafa Nihmath)  ஆகியோர் செவ்வாய்க்கிழமை (04)  சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்து கலந்துரையாடினர். 

2023-2027 ஆம் ஆண்டிற்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதான திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத் திட்டத்தின் அடிப்படையில்  இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கும், அதன் மூலம் சரியான ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குவதற்கும் உலக உணவுத் திட்டம் தொடர்ந்து  தனது பங்களி ப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுக்கு சரியான சந்தையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவாக, உலக உணவுத் திட்டத்தை (WFP) (2023-2027) செயல்படுத்துவதில் தலைமை தாங்கியதற்காக, உலக உணவுத் திட்டத்தின் (WFP) இலங்கைக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட  பிலிப் வார்டுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ நன்றி தெரிவித்தார். 

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், உணவு அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர் அளித்த பங்களிப்பிற்காகவும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். 

1968 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயல்பட்டு வரும் உலக உணவுத் திட்டம், பொருளாதார மற்றும் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி  பிலிப் வார்ட், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உலக உணவுத் திட்டத்தின் பணிகளைத் தொடர தேவையான ஆதரவை வழங்கியதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். 

சுகாதார துணை அமைச்சர் வைத்தியர் ஹன்சகா விஜேமுனி மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17