சர்வதேச இயலாமைக்குட்பட்டோர் தின இலங்கையின் தேசிய நிகழ்வு இம்முறை வடக்கு மாகாணத்தில் இடம்பெறுமென இயலாமைக்குட்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவின் இணைத்தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி திறன்விருத்தி நிலைய கேட்போர் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (04) இயலாமைக்குட்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவின் ஏற்பாட்டில் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதத் வசந்த டி சில்வா தலைமையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த இயலாமைக்குட்பட்டவர்களுக்கான அமைப்புக்கள், அவர்களுக்கு சேவை வழங்கும் அரச திணைக்களங்கள், அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினர், இந்த பாராளுமன்ற குழுவின் ஏற்பாட்டில் முதன்முறையாக சர்வதேச இயலாமைக்குட்பட்டோர் தின இலங்கையின் தேசிய நிகழ்வு இம்முறை வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்போது இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான இயலாமைக்குட்பட்டவர்கள் உள்ளனர். அதனடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தின் இயலாமைக்குட்பட்டவர்களுக்கான பாராளுமன்ற குழுவானது அவர்கள் சார்ந்த வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்துச்செல்லும் வகையில் மாவட்டம்தோறும் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்படுத்தி திட்டமொன்மொழிவுகள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நேரடியான ஆலோசனைகளையும் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் இக்குழுவின் முதலாவது சந்திப்பானது யுத்தத்தினால் அதிகளவு பாதிப்புக்களை எதிர்கொண்டு அதிக இயலாமைக்குட்பட்டவர்களை கொண்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்காக இன்று இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும் என தெரிவித்தார். அத்துடன் விரைவில் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான சந்திப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM