பசுமை ரயில் நிலையமாக ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்ட திருகோணமலை ரயில் நிலையத்தில் நடப்பட்டுள்ள மரங்களை கட்டாக்காலி மாடுகள் நாசாமாக்கி வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரி கோரிக்கை விடுக்கின்றார்.
தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், ரயில் நிலைய ஊழியர்களின் பங்களிப்புடனும் மரங்கள் நடுகை செய்யப்பட்டு பெருமளவான நேரத்தை ஒதுக்கி பராமரிப்பு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளினால் அவை நாசம் செய்யப்பட்டு வருகின்றன.
மதியத்திற்கு பின்னர் நூற்றுக்கணக்கான மாடுகள் ரயில் நிலையத்தின் வளாகத்தினுள் வந்து பசுமைமிக்க மரங்களை சேதமாக்கி வருகின்றன.
இதனால் குறித்த கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியபோது அவர்கள் ரயில் நிலையத்திற்கு வேலியிடுமாறு பொறுப்பற்ற விதத்தில் பதிலளிப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றது.
அத்துடன் எமது ரயில் நிலையத்தை தொடர்ந்து பசுமையான ரயில் நிலையமாக பேணுவதற்று அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியமாகும் எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM