தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று அதிகாலை வேளையில் தலவாக்கலை நகர மத்தியில் பட்டாசுகளை கொளுத்திக்கொண்டிருந்தபோது இரண்டு இளைஞர்கள் மீது கெப் ரக வாகனமொன்றில் மோதி சென்ற சாரதியை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று அதிகாலை வேளையில் தலவாக்கலை நகர மத்தியில் பட்டாசுகளை கொளுத்திக்கொண்டிருந்தபோது, கெப் ரக வாகனமொன்றில் மோதி இழுத்துச் செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த இளைஞன் சிகிச்சைப் பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (31) உயிரிழந்தார்.
சென்கிளையார் புகையிரத விடுதியைச் தற்காலிக வசிப்பிடமாக கொண்ட 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனுக்கு நீதிகோரியும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சாரதியை மீண்டும் கைது செய்யுமாறுகோரியும் 100 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரான சாரதி செவ்வாய்க்கிழமை (03) தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேகநபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM