20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண 2ஆவது கால் இறுதியில் கேட்வே அணியை களுத்துறை மு.ம. அணி எதிர்த்தாடுகிறது

05 Nov, 2025 | 01:46 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன்   ஸ்போர்ட்ஸ் ரிவி நடத்தும் 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தின் இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் கேட்வே கல்லூரி அணியை களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி எதிர்த்தாடவுள்ளது.

இந்தப் போட்டி கொம்பனித் தெரு சிட்டி லீக் மைதானத்தில் புதன்கிழமை (5) முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகும்.

கேட்வே கல்லூரி அணியின் போட்டி முடிவுகள் திருப்திகரமாக இல்லாத அதேவேளை களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 3 போட்டிகளிலும் இறுக்கமான வெற்றிகளை ஈட்டியுள்ளது.

சி குழுவில் புனித சூசையப்பர் கல்லூரி அணியை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிகொண்ட கேட்வே கல்லூரி அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் கடும் சவால் காத்திருந்தது.

கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியுடனான போட்டியை கடும் முயற்சியின் பின்னர்  கேட்வே கல்லூரி அணி  1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

மூன்றாவது போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை யாழ்ப்பாணத்தில் சந்தித்த கேட்வே கல்லூரி அணி கடும் சவாலுக்கு மத்தியில் அப் போட்டியையும் 2 - 2 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

மறுபுறத்தில் பி குழுவில் இடம்பெற்ற களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி தனது ஆரம்பப் போட்டியில் ஏறாவூர் அலிகார் கல்லூரி அணியை  ஏறாவூரில் 1 - 0 என வெற்றிகொண்டது.

துரதிர்ஷ்டவசமாக அலிகார் கல்லூரி அதன் பின்னர் போட்டியிலிருந்து நீங்கிக்கொண்டது.

இரண்டாவது போட்டியில் றோயல் கல்லூரி அணியை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டிய களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி, கடைசிப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் பலத்த சவாலுக்கு மத்தியில் 1 - 0 என வெற்றிபெற்றது.

இந்த இரண்டு அணிகளினதும் போட்டி முடிவுகளின் பிரகாரம் முஸ்லிம் மத்திய கல்லூரி அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

ஆனால், கெட்வே கல்லூரி அணி இப் போட்டியை இலகுவில் விட்டுக்கொடுக்காது என கருதப்படுகிறது.

அணிகள்

கேட்வே கல்லூரி: நடால் சேனபால, ஸெய்த் இஸ்திகுவார், நசிர் ஸஹ்ரி, தாஜ் ரீஸா, ஹமூத் ரிஸ்வான், நிக்காஸ் கோவிந்தன், நுஸ்ரான் நஸீர், ஹுமய்த் இர்ஷாத், உமர் ஷக்கில், ஏய்டன் பெரேரா, ஸக்கி அஷ்ரப், இமாத் ஷரீக், கிரேத்திக் லலிதகுமார், அயூப் பஹாம், துலின விக்ரமசிங்க, ஹம்தான் இர்ஷாத், ரஸியெல் அமீன், ரெஹான் ஜயசிங்க, ஹனன் ஹலீம், இஹ்சான் பலீல், ரதிஷ் யசக்கி. சபித் இக்பால், மாஹிர் இம்ரான். பயிற்றுநர்: ஜேம்ஸ் ஹீத்

களுத்துறை முஸ்லிம் ம.க. : எம். பஹாத், எம். மர்வன், எம். ரம்ஸான், எம். நுசய்ர், ஏ. அஹமத், எம். மரிக்கார், ஐ. அஹமத், எம். இஷாக், எம். ஸஹ்ரான், ஜே. அஹமத், எம். அயூப், எம். நஜாத், எம். பர்சான், என். சாபித், எம். முன்சிவ், எம். பர்வீஸ்,  எம். ஷபீர், எம். அஹமத், எம். ராஷித், எம். பயாஸ், என். அஹமத், எம். சாதிர், எம். ஸாபித்.  பயிற்றுநர்: எவ். எம். இன்தியாஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்