அரச ஊழியர்கள் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும் - வஜிர அபேவர்த்தன

05 Nov, 2025 | 09:10 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

2001 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரதம் வீழ்ச்சியடைந்திருந்த  சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளாராக இருந்து  பொருதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த அதிகாரியாவகவே நாங்கள் சரித்த ரத்வத்தேயை அறிந்திருந்தோம். அதனால்  அரச ஊழியர்கள் அரச சுற்றுநிருபம் மற்றும்  நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய அரச ஊழியர்கள் செயற்படவேண்டு்ம் என ஐக்கிய  தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டு,  கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலாேசகர் சரித்த ரத்வத்தேயின் வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சரித்த ரத்வத்தே 1980 காலப்பகுதியில் நாட்டில் இளைஞர் சேவை மன்றத்தை ஏற்படுத்துவதற்கும் அதனை முறையாக நாட்டுக்கு பிரயோனமானமுறையில் மேற்கொள்ளவும் அதற்கு தலைமைத்துவம் வழங்கிய அரச அதிகாரியாகவே அவரை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

அதேபோன்று அவர் 2001 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரதம் வீழ்ச்சியடைந்திருந்த  சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளாராக இருந்து  பாரிய சேவையை மேற்கொண்டு பொருதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த அதிகாரியாவகவே நாங்கள் அறிந்திருந்திருக்கிறோம்.

அதேபோன்று 1988 காலப்பகுதியில் ஜனசவிய திட்டத்தை ஆரம்பிக்கும்போதும். அதற்காகவும் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கு தேவையான  ஒத்துழைப்புகளை வழங்கிய அரச அதிகாரியாகவே நாங்கள் அறிந்திருந்திருக்கிறோம்.

மேலும் நாங்கள நாட்டில் மிகவும்  சிந்தனையுடனடே நாட்டில் செயற்படவேண்டி இருக்கிறது. அரச அதிகாரிகள் எடுக்கும் தீர்மானங்களின்போது அரசாங்கத்துக்கு லாபம் ஏற்பட்டால் நாங்கள் நன்றி கூறுவதில்லை. அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கத்துக்கு நன்மை பயக்கும் சந்தர்ப்பங்களில் அதில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில்லை.

உண்மையாக எடுக்கும் தீர்மானங்களினால் ஏற்படும் நட்டம் தொடர்பில் பொது நிர்வாக சுற்றுநிருபம் மற்றும்  நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய அரச ஊழியர்கள் செயற்படவேண்டும் என்றே முன்னாள் பொது நிர்வாக  அமைச்சர் என்றவகையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக குற்றச்செயல் சந்தர்ப்பம் பதவிர வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்கள் மிகவும் உணர்வுமிக்க நபர்கள் என்பதால், மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என்பதையே இந்த சந்தரப்பத்தில் நினைவுபடுத்திக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வளாகங்களை...

2026-07-11 15:52:56
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சேதங்கள் குறித்து...

2026-07-11 15:33:05
news-image

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்பவே கைதுகளும் குற்றத்தடுப்பு...

2026-07-11 15:32:14
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 166 பெண்...

2026-07-11 14:57:59
news-image

திறைசேரி நிதி மோசடி: 2.5 மில்லியன்...

2026-07-11 14:52:00
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஐநா மனித...

2026-07-11 14:40:33
news-image

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 31 வயதுடைய...

2026-07-11 14:01:57
news-image

பதுளையில் தனியார் ஆய்வகங்களில் காலாவதியான மருத்துவ...

2026-07-11 13:19:57
news-image

நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் :...

2026-07-11 13:10:48
news-image

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின்...

2026-07-11 12:33:36
news-image

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக...

2026-07-11 12:36:14
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற...

2026-07-11 12:18:21