அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லில் உள்ள முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட UPS நிறுவனத்திற்குச் சொந்தமான பாரிய சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 3 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
UPS 2976 கார்கோ விமானத்தில் மூன்று ஊழியர்கள் பயணித்ததாக UPS தெரிவித்துள்ளது. லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹொனலுலு நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் (நவம்பர் 4, 2025) ஓடுபாதையில் இருந்து விலகி, அருகில் உள்ள கட்டடமொன்றில் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.
விமானம் தரையில் மோதியவுடன் பாரிய வெடிப்புடன் தீப்பற்றியது. இதில், விமானத்தில் இருந்த சுமார் 280,000 கலன் எரிபொருள் தீயை மேலும் தீவிரப்படுத்தியதால், பல மைல் தூரத்திற்குத் தீப்பிழம்பு தெரிந்தது.
விபத்து நடந்த கட்டடத்தின் உள்ளே குறைந்தது 25 பேர் சிக்கியிருக்கலாம் என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.
கென்டக்கி மாநில ஆளுநர் ஆண்டி பெஷியர் (Andy Beshear) அளித்த தகவலின்படி, விபத்தில் குறைந்தது 3 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 11 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளான கட்டடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடினர். விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் 5 மைல் தூரம் வரை மக்கள் வெளியேறுமாறு உள்ளூர் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) இணைந்து விசாரணை நடத்தவுள்ளன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM