(நெவில் அன்தனி)
இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து முடிந்த 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, விக்கெட் காப்பு ஆகியவற்றில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 11 வீராங்கனைகள் உலகக் கிண்ண தெரிவு அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டை தலைவியாகக் கொண்ட உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் வீராங்கனை சிட்ரா நவாஸ் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் விக்கெட் காப்பாளர் நிலையில் சிட்ரா நவாஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவர் 4 பிடிகளை எடுத்ததுடன் 4 ஸ்டம்ப்களை செய்துள்ளார்.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோரின் மிகவும் கடினமான பிடியை சிட்ரா இடப்புறமாக தாவி எடுத்த விதமும் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் கிம் கார்த்தை மின்னல் வெகத்தில் ஸ்டம்ப் செய்த விதமும் அனைவரையும் பிரமிக்கவைத்தது.
அவரை விட உலகக் கிண்ண தெரிவு அணியில் உலக சம்பியனான இந்திய அணியிலிருந்து மூவரும் இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்க அணியிலிருந்து மூவரும் இங்கிலாந்து அணியிலிருந்து ஒருவரும் பதில் விராங்கனை ஒருவரும் இடம்பெறுகின்றனர்.

உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் லோரா வுல்வார்ட் ஆவார். அவர் 2 சதங்கள் உட்பட 571 ஓட்டங்களைக் குவித்தார்.
பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 22 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார்.


அவர் துடுப்பாட்டத்திலும் 3 அரைச் சதங்களுடன் 215 ஓட்டங்களைப் பெற்றதால் மகளிர் உலகக் கிண்ண தொடர் நாயகி விருது அவருக்கு வழங்கப்பட்டது.
துடுப்பாட்ட வரிசையில் அந்தந்த இலக்கங்களில் பிரகாசித்தவர்களில் அதிசிறந்தவர்களே உலகக் கிண்ண தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சகலதுறை வீராங்கனைகளாவர்.
உலகக் கிண்ண தெரிவு அணி
(துடுப்பாட்ட வரிசை பிரகாரம்)
ஸ்ம்ரித்தி மந்தனா (434 ஓட்டங்கள்), லோரா வுல்வார்ட் (571 ஓட்டங்கள்), ஜெமிமா ரொட்றிக்ஸ் (292 ஓட்டங்கள்), மாரிஸ்ஆன் கெப் (208 ஓட்டங்கள், 12 விக்கெட்கள்), ஏஷ்லி கார்ட்னர் (328 ஓட்டங்கள், 7 விக்கெட்கள்), தீப்தி ஷர்மா (215 ஓட்டங்கள், 22 விக்கெட்கள்), அனாபெல் சதர்லண்ட் (117 ஓட்டங்கள், 17 விக்கெட்கள்), நாடின் டி க்ளார்க் (208 ஓட்டங்கள்), சிட்ரா நவாஸ் (4 பிடிகள், 4 ஸ்டம்ப்கள்), அலானா கிங் (13 விக்கெட்கள், 59 ஓட்டங்கள்), சொஃபி எக்லஸ்டோன் (13 விக்கெட்கள்)
12ஆம் இலக்க வீராங்கனை: நெட் சிவர் - ப்றன்ட் (262 ஓட்டங்கள், 9 விக்கெட்கள்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM