செல்வ வளம் மேம்படுவதற்கான பிரத்யேக வழிபாடு

04 Nov, 2025 | 06:22 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்தம் தங்களுடைய கடுமையான உழைப்பின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவில் வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

இதில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து, தங்களது வருவாய் உயர்ந்து விடாதா ..? என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணமும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான சூட்சமங்கள் தெரியாமல் தவிக்கிறார்கள்.

இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இத்தகைய நிலையில் செல்வ வளம் மேம்பாட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு சூட்சமமான குறிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

நீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடுத்த நட்சத்திர நாளன்று அல்லது வெள்ளிக்கிழமை அன்று காலை சுக்கிர ஹோரை தருணத்தில் அருகில் இருக்கும் பெருமாள் சன்னதிக்கு சென்று அங்கு தனிசன்னதியுடன் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயாரை வெண் தாமரை சாற்றி வழிபட வேண்டும்.  அத்துடன் அந்த மகாலட்சுமி தாயாரின் சன்னதியின் முன் 24 நிமிடம் தியானிக்க வேண்டும்.

அந்தத் தருணத்தில் 'ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ' எனும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அத்துடன் செல்வ வளம் படிப்படியாக உயர வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையும் தாயாரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

இதனை உங்களது ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரம் அதாவது உதாரணத்திற்கு நீங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால்... உத்திரட்டாதி நட்சத்திர தினத்தன்று மகாலட்சுமி தாயாரை வெண் தாமரை மலரை சாற்றி, பிரத்யேக மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் செல்வ வளம் மேலோங்கும்.

எம்மில் சிலருக்கு இத்தகைய பிரார்த்தனையை மேற்கொள்ளும் போது சனி பகவான் தடையை ஏற்படுத்துவார். வெள்ளிக்கிழமைகளில் உங்களால் காலை ஐந்து மணி அளவில் எழுந்து சுக்கிர ஹோரையில் ஆலயத்திற்கு செல்ல இயலாத வகையில் உறக்கத்தையோ அல்லது சோம்பலையோ வழங்கக் கூடும். இதனை உணர்ந்து நீங்கள் நாளாந்தம் அதிகாலை ஐந்து மணியளவில் எழுந்து விட வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சனி பகவான் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.‌

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிறவி கர்மாவை கழிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-11-08 18:14:04
news-image

இல்லங்களில் தன வரவு அதிகரிப்பதற்கான சூட்சம...

2025-11-07 17:21:54
news-image

கடன் சுமையை குறைப்பதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-06 16:54:52
news-image

செல்வ வளம் மேம்படுவதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-04 18:22:32
news-image

ராஜயோகத்தை அள்ளித்தரும் பிரத்யேக வழிபாடு

2025-11-03 17:27:01
news-image

2025 நவம்பர் மாத ராசி பலன்கள்

2025-11-02 10:17:00
news-image

வறுமையை நீக்கி செல்வ வளத்தை உண்டாக்கும்...

2025-11-01 15:17:56
news-image

காணி மீதான தோஷத்தை நீக்குவதற்கான பிரத்யேக...

2025-10-31 16:11:01
news-image

வெற்றிகளை அள்ளித் தரும் சூட்சும வழிபாடு..!?

2025-10-30 17:25:01
news-image

பணக்கஷ்டம் வராமல் இருப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-10-29 18:24:49
news-image

மறுமணம் நடைபெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2025-10-28 16:41:56
news-image

செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கான வாழ்வியல் குறிப்பு..!?

2025-10-27 15:14:26