டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பிற்கான நவீன அறிகுறிகள்..!?

04 Nov, 2025 | 06:18 PM
image

இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரு மடங்கு வேகத்தில் உயர்ந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகிறது.

அத்துடன் சர்க்கரை நோய் தாக்கத்தின் அறிகுறிகளாக இதுவரை அதீத தாகம் - அடிக்கடி சிறுநீர் கழித்தல்-  இரவு நேரத்தில் உறக்கத்திலிருந்து எழுந்து சிறுநீர் கழித்தல் - அதிக பசி- திடீர் எடை இழப்பு- அதீத சோர்வு- ஆகியவற்றை குறிப்பிட்டனர். ஆனால் தற்போது இதை கடந்து புதிய அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாகவும் இத்துறை நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் குறிப்பிடுகையில், '' நீண்ட நாட்களாக உள்ள பல், ஈறு ஆகியவற்றில் ஏற்படும் ரத்த கசிவு- தோல் அரிப்பு - இரவு நேரத்தில் ஏற்படும் சளியுடன் கூடிய இருமல் - காய்ச்சல்- நிறத்தை அடையாளப்படுத்துவதில் ஏற்படும் பார்வை சார்ந்த சிக்கல்கள் - பாலியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபாடும், ஆர்வமும் குறைவு - தலை முடி உதிர்வு- பாத எரிச்சல்- கால் மற்றும் கால் விரல்களின் இடுக்குகளில் ஏற்படும் சேத்து புண்- கால் தற்காலிகமாக மரத்து போதல் அல்லது உணர்விழத்தல்- மன உளைச்சல் -ஆகியவை கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்திருப்பதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகள்-  பாதிப்புகள் - இருந்தால் அவை தொடக்க நிலையிலேயே அருகில் இருக்கும் சர்க்கரை நோய் நிபுணரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் இரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு, இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான பிரத்யேக மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார்கள்.

* ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவில்லை என்றால் .. பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே உள்ள பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி பற்களின் உறுதித்தன்மையை சீர்குலைக்கும். இதனால் அங்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது.

* ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாவிடில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கும். இதனுடைய வெளிப்பாடு தான் தோல் அரிப்பு.

* இருமல், சளி, இரவு நேர காய்ச்சல் ... இவர்களுக்கு குருதி பரிசோதனை மேற்கொண்டால் ரத்த சக்கரையின் அளவு கட்டுப்பாடற்றதாக இருக்கும். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவதால் காச நோய் பாதிப்பும் ஏற்படக்கூடும்.

* கண் பார்வையில் பாதிப்பு, தடுமாற்றம்- நிறத்தை அடையாளப்படுத்துவதில் தடுமாற்றம் ஏற்படக்கூடும். இதுவும் ரத்த சர்க்கரையில் பாதிப்பின் காரணமாகவே உண்டாகிறது.

* தலைமுடி உதிர்வு- சமச்சீரற்ற ஹோர்மோன் சுரப்பி காரணமாகவும்.. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் இயல்பான அளவைவிட குறைவான அளவு காரணமாகவும் இதே பாதிப்பு ஏற்படக்கூடும்.

* பாத எரிச்சல்- சேத்துப்புண், கால் விரல்கள் இடுக்குகளில் ஏற்படும் பாதிப்பு-  மழைக்காலங்களில் இவை பொதுவாக ஏற்படும். இவையும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டின்மை காரணமாகவே ஏற்படும்.

*மன உளைச்சல்- கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரையின் அளவின் காரணமாக மூளையில் சீராக இயங்கக்கூடிய மின்னாற்றல் மற்றும் சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம் காரணம்.

என புதிய அறிகுறிகளுக்கான மருத்துவ ரீதியான விளக்கத்தையும் நிபுணர்கள் வழங்குகிறார்கள். இதன் காரணமாக இரத்த சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவை வைத்தியர்களின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால்.. ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ இயலும்.

வைத்தியர் ராஜேஷ் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளையை பாதுகாப்பாக...

2025-11-07 18:22:58
news-image

குறட்டை விடுவதற்கு உடல் எடை அதிகம்...

2025-11-06 16:55:26
news-image

டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பிற்கான...

2025-11-04 18:18:49
news-image

மாரடைப்பு பாதிப்பு ஏற்படுமா? என்பதனை அறிய...

2025-11-03 17:30:29
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-11-01 15:03:10
news-image

செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சையில் அறிமுகமாகி இருக்கும்...

2025-10-31 18:09:47
news-image

இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு தண்ணீர் பருகுவதில்...

2025-10-30 18:09:24
news-image

எண்டோமெட்ரியோசிஸ் எனும் கருப்பையகப் பாதிப்பிற்குரிய அறிகுறிகள்...

2025-10-29 18:16:57
news-image

சர்க்கரை நோய்க்கும், இதய பாதிப்பிற்கும் உள்ள...

2025-10-28 17:08:30
news-image

லிம்போபுரோலிஃபெரேடிவ் டிஸார்டர் எனும் நிணநீர் மண்டல...

2025-10-27 15:17:25
news-image

ஒவ்வாமை பாதிப்பிற்குரிய நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

2025-10-25 18:25:43
news-image

கம்பார்ட்மெண்ட் சிண்ட்ரோம் எனும் தசை பாதிப்பிற்குரிய...

2025-10-24 14:54:30