இயக்குநர்கள் சேரன் - விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம் 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

04 Nov, 2025 | 06:04 PM
image

இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை முத்திரை பதித்த நட்சத்திர இயக்குநர்களான சேரன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கே. பி .ஜெகன் இயக்கத்தின் உருவாகி உள்ள 'ரோஜா மல்லி, கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் கே. பி. ஜெகன், எம். எஸ். பாஸ்கர் , 'பிக் பொஸ்' பிரபலம் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா , திண்டுக்கல் அலெக்ஸ், 'உறியடி' சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுக செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார் ஆந்தாலாஜி பாணியிலான இந்த திரைப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' மூன்று கதைகள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது தான் இப்படத்தின் திரைக்கதையில் இடம்பெறும் சுவாரசியம். பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படைப்பாகவும் உருவாகி இருக்கிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறு தெய்வ வழிபாட்டின் பின்னணியை விவரிக்கும்...

2025-11-08 17:43:36
news-image

மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

2025-11-08 17:34:16
news-image

அருண் விஜய் நடிக்கும் ' ரெட்ட...

2025-11-08 17:26:28
news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59
news-image

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மே'...

2025-11-07 15:47:19
news-image

சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான்...

2025-11-07 15:31:25
news-image

இணையத்தை அதிர வைக்கும் பிரபுதேவா பட...

2025-11-07 15:23:24
news-image

டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான...

2025-11-07 15:09:59
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2025-11-06 16:56:38