நடிகர் ரவி மோகன் வெளியிட்ட ' மிடில் கிளாஸ்' படத்தின் டீசர்

04 Nov, 2025 | 05:59 PM
image

நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகரான முனிஸ்காந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' மிடில் கிளாஸ்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ' மிடில் கிளாஸ் 'எனும் திரைப்படத்தில் முனீஸ்காந்த் , விஜயலட்சுமி , குரேசி, காளி வெங்கட், ராதாரவி, கோடாங்கி வடிவேலு, மாளவிகா அவினாஷ் , வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனி ராஜ் இசையமைத்திருக்கிறார் நடுத்தர மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் தேவ் மற்றும் கே வி துரை ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் நடுத்தர வர்க்கத்து மக்களின் நாளாந்த வாழ்வியலை யதார்த்தமாக காட்சிப்டுத்தி இருப்பதால் குறிப்பிட்ட பிரிவு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தின்...

2025-11-08 18:20:39
news-image

குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும்...

2025-11-08 18:18:09
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:16:39
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:15:52
news-image

இயக்குநர் சீனு ராமசாமி - நடிகர்...

2025-11-08 18:06:32
news-image

சிறு தெய்வ வழிபாட்டின் பின்னணியை விவரிக்கும்...

2025-11-08 17:43:36
news-image

மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

2025-11-08 17:34:16
news-image

அருண் விஜய் நடிக்கும் ' ரெட்ட...

2025-11-08 17:26:28
news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59