(இராஜதுரை ஹஷான்)
உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கரையோர மாவட்டங்களில் புதன்கிழமை (05) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகை இடம்பெறவுள்ளது.
களுத்துறை, காலி , மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அபாய இழிவளவாக்கல் நடவடிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தின் போது வீண் அச்சம்கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் இந்த ஒத்திகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் ஒத்திகையை உண்மையான சுனாமி அச்சுறுத்தல் எனக் கருதி அச்சமடையவோ அல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோ வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை) சம்பத் கொடுவேகொட குறிப்பிடுகையில், சுனாமி அனர்த்தத்தின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் தான் இந்த ஒத்திகை இடம்பெறுகிறது.
கடந்த காலங்களில் இவ்வாறான ஒத்திகை இடம்பெறும் போது உண்மையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று விட்டது என்று பொதுமக்கள் அச்சமடைந்தார்கள். ஆகவே வீண் அச்சமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சுனாமி அனர்த்த முன்கூட்டிய சமிஞ்சை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 77 கோபுரங்களும் செயலிழந்துள்ளன. இந்த கோபுரங்களுக்கு சமிஞ்சை வழங்கிய செய்மதிகள் செயலிழந்துள்ளதால் இவை முற்றாக செயலிழந்துள்ளன என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM