இடைநிறுத்தப்பட்ட செயலகக் கட்டிடத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

04 Nov, 2025 | 05:05 PM
image

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டுமானங்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகக் கட்டிடங்களின் கட்டுமானத் திட்டங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கும், கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களை அரச முதலீட்டுத் திட்டத்தில் உட்சேர்த்து தேவையான நிதியொதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வினைத்திறனுடன் வழங்கும் நோக்கில் தாபிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமைகளை மேற்கொள்வதற்காக போதியளவு இடவசதிகள் இன்மையால் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான புதிய கட்டிடங்கள் சில கடந்த வருடம் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அவற்றில், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் செலவுத் தலைப்புக்களின் கீழ் வழங்கப்படுகின்ற வருடாந்த நிதியொதுக்கீட்டின் அடிப்படையில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 05 கருத்திட்டங்களும், போதியளவு நிதியுதவி கிடைக்காமையால் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள 06 கருத்திட்டங்களும் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் கட்டுமானத் துறையில் பொதுவாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள் காரணமாக அக்கட்டிடங்களைக் குறித்த மதிப்பீட்டுச் செலவு அதிகரித்துள்ளமையால், அவற்றின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தாமதமாகியுள்ளது.

 அதற்கமைய, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, வருடாந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு மொத்த செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்து, அவற்றின் கட்டுமானப் பணிகளை துரிதமாகப் பூர்த்தி செய்வதற்கும், கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களை அரச முதலீட்டுத் திட்டத்தில் உட்சேர்த்து தேவையான நிதியொதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44
news-image

கெப்பித்திகொல்லாவயில் காட்டு யானை தாக்கி இருவர்...

2026-09-05 11:38:53
news-image

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலை...

2026-09-05 11:21:34
news-image

தொம்பே பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத...

2026-09-05 11:18:09
news-image

வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் இளம் சாரதிகள்!...

2026-09-05 11:08:02