(இராஜதுரை ஹஷான்)
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாகன இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது. வரிகளை மீண்டும் அதிகரித்தால் சகல விதமான வாகனங்களின் விலைகள் 15 முதல் 25 சதவீதம் வரையில் உயர்வடையும். நடுத்தர மக்களும் வாகனங்களை கொள்வனவு செய்யும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் பதில் தலைவர் அரோச கொட்றிகோ வலியுறுத்தினார்.
2026 நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் குறித்து தமது நிலைப்பாட்டை குறிப்பிடுகையில் வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் பதில் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரியினால் பெரும்பாலானோரின் வாகன கனவு நிறைவேறாமல் உள்ளது. வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரியை குறைக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். வாகன வரியை அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.
வரிகளை மீண்டும் அதிகரித்தால் சகல விதமான வாகனங்களின் விலைகள் 15 முதல் 25 சதவீதம் வரையில் உயர்வடையும்.நடுத்தர மக்களும் வாகனங்களை கொள்வனவு செய்யும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117 சதவீதத்தை பூர்த்திசெய்யக் கிடைத்திருப்பதாக இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
2025 செப்டெம்பர் 30ஆம் திகதியில் இலங்கை சுங்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 1485 பில்லியன் ரூபாய் என்றும், 1737 பில்லியனை ரூபாவை வருமானமாகப் பெற முடிந்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்கவின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இலங்கை சுங்கத்தின் வருமானம் கணிசமானளவு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.
இதற்கு அமைய 2025 ஒக்டோபர் 14ஆம் திகதியாகும் போது வாகன இறுக்குமதியால் அதிக வருமானமாக 587.11 பில்லியன் ரூபாய் கிடைத்திருப்பதாகவும்,இது ஒட்டுமொத்த வருமானத்தில் 37 சதவீதம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதன்படி கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதியுடன் 55,447 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக 472.26 பில்லியன் ரூபாய் சுங்கவரி வருமானம் கிடைத்துள்ளது. 733 சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதியின் மூலம் 48.67 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஒரு இலட்சத்து 42,524 மோட்டார் சைக்கிள் மற்றும் 15,035 முச்சக்கர வண்டிகளின் இறக்குமதியின் ஊடாக முறையே 30.3 பில்லியன் ரூபாய் மற்றும் 15.10 பில்லியன் ரூபாய் 1679 பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் வேன் ரக வாகன இறக்குமதியின் ஊடாக 12.66 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM