யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது.!

Published By: Robert

10 Aug, 2017 | 08:56 AM
image

யாழ். சுன்­னாகம் பகு­தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிவில் உடையில் கட­மையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்­கு­தலை நடத்­திய குழு­வி­னரில் இருந்­த­தாக கூறப்­படும் மூன்று ஆவா குழு சந்­தேக நபர்­களை  சுன்­னாகம் பொலிஸார் நேற்று கைது செய்­தனர்.  கொக்­குவில் பகு­தியில் பொலிஸார் இரு­வரை வெட்டி காய­ப்படுத்­தி­யமை தொடர்பில் கைது செய்­யப்பட்டு தடுத்து வைக்­கப்பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆவா குழுவின் தலைவன்  நிஷா விக்டர் உள்­ளிட்ட ஏழு பேரிடம் முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­யவே நேற்று இம்­மூ­வ­ரையும் கைது செய்­த­தாக வட மாகாண பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

 மானிப்­பாயில் வைத்து ஒரு­வ­ரையும் மற்­றை­ய­வரை சுன்­னா­கத்தில் வைத்தும் கைது செய்­த­தா­கவும் அவர்­களை இன்று மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும்  அந்த தக­வல்கள் உறுதி செய்­தன.

 கடந்த 2016.10.23 அன்று யாழ். சுன்­னாகம் பகு­தியில் சிவில் உடையில் கட­மையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்­குதல் நடாத்­தப்பட்­டது. இதனை அடுத்து தேசிய  உளவுத் துறை பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நலிந்த ஜய­வர்­த­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய அமைக்­கப்­பட்ட தேசிய புல­னாய்வுப் பிரிவின் உளவுத் துறை அதி­கா­ரிகள் அடங்­கிய விசா­ரணைக் குழுவின் உத­வி­யுடன், பயங்­க­ர­வாத புல­னா­ய்வுப் பிரிவு விசா­ரணைப் பிரிவு 13 சந்­தேக நபர்­களை அப்­போது பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­தது. எனினும் பின்னர் அவர்கள் மீதான பயங்­க­ர­வாத தடைச்சட்டம் நீக்­கப்பட்டு தடைசெய்­யப்பட்ட கத்­திகள் தொடர்­பி­லான கட்­டளைச் சட்டம் அமுல் செய்­யப்பட்­டது. இந் நிலையில் அந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என அடை­யாளம் காணப்­பட்ட  ஆவா குழுவின் அப்­போ­தைய தலைவன் தேவா உள்­ளிட்டோர் தலை­ம­றை­வான நிலையில் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.. 

 இந் நிலை­யி­லேயே தற்­போது கைது செய்­யப்பட்­டுள்ள ஆவா குழுவை வழி நடத்தும் விக்டர் உள்­ளிட்டோர் விசாரணையில் வழங்கிய தகவல்களுக்கு அமைய  தலைமறைவாகியிருந்த குறித்த

உளவுத் துறை பொலிஸார் மீதான தாக்கு தலுடன் தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58