(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் எம்பிலிப்பிட்டி பொது மைதானத்தில் நடத்தப்பட்ட 54ஆவது சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஏ. ஆயிலை, தட்டெறிதலிலும் குண்டெறிதலிலும் தங்கப் பதக்கங்களை வென்று அப் பிரிவில் தனது பாடசாலையை சம்பியனாக்கி பெருமை சேர்த்துக்கொண்டார்.
இந்த சம்பியன்ஷிப்பில் பக்கமூன மஹாசேன் தேசிய பாடசாலை மாணவன் டபிள்யூ. கமகேவும் பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலய மாணவி ஆர். ஏக்கநாயக்கவும் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக தெரிவாகினர்.
அக்டோபர் 30, 31ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றிய சிறுவர்கள், சிறுமிகள் அனைவரும் வெற்றியாளர்களாக கொண்டாடப்பட்டனர். எவ்வாறாயினும் ஒட்டுமொத்த சம்பியன்கள் தெரிவுசெய்யப்பட்டு கிண்ணங்கள் வழங்கப்பட்டது.
சிறுவர்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் சிறுமிகள் பிரிவில் நீர்கொழும்பு ஆவே மரியா கல்லூரியும் ஒட்டு மொத்த சம்பியன்களாகின.
இப் பிரிவுகளில் முறையே கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியும் இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரியும் இரண்டாம் இடங்களைப் பெற்றன.
54ஆவது சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லநர் சம்பயின்ஷிப்பில் சிறுவர்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 82 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
சிறுமிகள் பிரிவில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 52 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
கனிஷ்ட சிறுவர்கள் பிரிவில் 4 புதிய போட்டி சாதனைகளும் சிறுமிகள் பிரிவில் 6 புதிய போட்டி சாதனைகளுமாக மொத்தம் 10 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி சம்பியன்
இந்த சம்பியன்ஷிப்பில் இருபாலாரிலும் ஒவ்வொரு வயது பிரிவுகளிலும் பாடசாலைகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் 3 இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டது.
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான எறிதல் போட்டிகளில் ஏ. ஆயிலை தனிப்பட்ட அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தி 2 தங்கப் பதக்கங்களை சுவீகரித்ததன் பலனாக அப் பிரிவில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி 20 புள்ளிகளுடன் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
சனிக்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தட்டெறிதல் போட்டியில் 25.29 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்த ஆயிலை, நேற்றுமுன்தினம் குண்டு எறிதல் போட்டியிலும் (10.60 மீற்றர்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தினார்.
மன்னார் மாணவி வில்ஷியாவுக்கு தங்கம்
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான உயரம் பாய்தலில் மன்னார், பேசாலை புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி டபிய்யூ. வில்ஷியா தங்கப் பதக்கம் வென்றார்.

இவர் 1.54 மீறறர் உயரத்தைத் தாவி, குறைந்த முயற்சிகளின் அடிப்படையில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அதிக முயற்சிகளில் இதே உயரத்தைத் தாவிய வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை மாணவி டி. வர்ணகுலசூரிய வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இப் போட்டியில் பங்குபற்றிய வல்வெட்டித்துறை இமயணன் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மாணவி ரீ. அனுஷா துரதிர்ஷ்டவசமாக வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டு நான்காம் இடத்தைப் பெற்றார்.
கொழும்பு கேட்வே கல்லூரி மாணவி எம். ஆரியான்ஷாவும் அனுஷாவும் 1.45 மீற்றர் என்ற ஒரே உயரத்தைத் தாவிய போதிலும் குறைந்த முயற்சிகளின் அடிப்படையில் கேட்வே மாணவி 3ஆம் இடத்தைப் பெற்றார்.
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் வி. தருண், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் வி. அபினவ் ஆகிய இருவரும் 43.58 மீற்றர் என்ற ஒரே தூரத்தைப் பதிவுசெய்து முறையே 4ஆம், 5ஆம் இடங்களைப் பெற்றனர்.
அதிசிறந்த மெய்வல்லுநர்கள்
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 15.41 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 848 சர்வதேச மெய்வல்லுநர் சங்க தரவரிசைப் புள்ளிகளைப் பெற்ற மஹாசேன் மத்திய கல்லூரி வீரர் டபிள்யூ. கமகே, இந்த வருட சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராகத் தெரிவானார்.
15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுககான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.73 செக்கன்களில் நிறைவுசெய்து 852 சர்வதேச மெய்வல்லுநர் சங்க தரவரிசைப் புள்ளிகளைப் பெற்ற பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலய வீராங்கனை ஆர். ஏக்கநாயக்க அதிசிறந்த பெண் மெய்வல்லுநராக தெரிவானார்.
ஒட்டுமொத்த சம்பியன்கள்
54ஆவது சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 13 வயதுக்குட்பட்ட, 14 வயதுக்குட்பட்ட, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த மூன்று வயது பிரிவுகளிலும் பெறப்பட்ட மொத்த புள்ளிகளின் பிரகாரம் சிறுவர்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (82 புள்ளிகள்) ஒட்டுமொத்த சம்பியனானது.
இப் பிரிவில் பக்கமூன மஹாசேன் தேசிய பாடசாலை (78 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி (72) மூன்றாம் இடத்தையும் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி (37 புள்ளிகள்) நான்காம் இடத்தையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை (32) ஐந்தாம் இடத்தையும் பெற்றன.
சிறுமிகள் பிரிவில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 52 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
மாத்தறை சுஜாதா வித்தியாலயம் (45 புள்ளிகள்), கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம் (36), நீர்கொழும்பு ஆவே மரியா கல்லூரி (32), இரத்தினபுரி லைசியம் சர்வதேச பாடசாலை (25) ஆகியன முறையே 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களைப் பெற்றன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM